Thursday, September 13, 2012

சொல் வரிசை - விளக்கம்

முதல் திரை ஜாலம் சொல் வரிசை பற்றிய விளக்கம்:

இது ஒரு திரைப்படப் பாடல்களின் தொடக்க சொற்களைக் கொண்ட பாடல் ஜாலம்
சில திரைப்படப் பாடல்களின் தொடக்க சொற்களை வரிசைப் படுத்தினால் 
வேறு ஒரு  திரைப் படப்பாடலின் முதல் வரிகளாக  அமையும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு இந்த சொல் வரிசை ஜாலத்தை விளக்கும்.

திரைப்படம்                         பாடலின் தொடக்கம்                                             தொடக்கச் சொல்

புதிய பறவை                      பார்த்த ஞாபகம் இல்லையோ                             பார்த்த
சுப்ரமணியபுரம்                 கண்கள் இரண்டால்                                                கண்கள்
வளர்பிறை                          நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும்          நான்கு
பார்த்திபன் கனவு             பழகும் தமிழே பார்த்திபன் மகனே                    பழகும்
என் அண்ணன்                    நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு                         நெஞ்சம்
சிவப்பு மல்லி                     ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்                 ரெண்டு

மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்

பார்த்த கண்கள் நான்கு
பழகும் நெஞ்சம் ரெண்டு

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் உல்லாசப் பயணம்

                                                 *********** 
இனி புதிர் பற்றி ... 

நண்பர்களும் இந்த சொல் வரிசையில்  கலந்து கொள்ளும்  வகையில்புதிராக அமைக்க உள்ளேன். ஆறு அல்லது அதற்கு  மேற்பட்ட திரைப்படங்களின் பெயர்கள்  புதிரில் கொடுக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்த எல்லாப் பாடல்களின் முதல் சொற்களை முறையாக வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல்  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும்திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:      தொகையறா வரிகள், தொடக்கத்தில் வரும் 
                     ஹம்மிங் (லா லா, ஓ ஓ, ஆஆ போன்றவை)
                     தவிர்க்கப் படவேண்டும். பல்லவியில் தொடங்கும் 
                     சொற்களும், வரிகளும் மட்டுமே புதிரில் அமையும்.

விடைகளை மேலே கண்ட எடுத்துக்காட்டில் உள்ளது போல் எழுதி        நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். sathyaapathi@gmail.com
ராமராவ்                                                                        

1 comment:

  1. ராராவ் அவர்களுக்கு,

    வணக்கம்.

    திரைஜாலம் புதிர் ஒரு நல்ல முயற்சி. ஆர்வத்துடன் வரவேற்கிறேன்.
    நன்றி.
    முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete