Sunday, September 23, 2012

எழுத்துப் படிகள் - 2

எழுத்துப் படிகள் - 2 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
இதயக்கனி
அடிமைப்பெண்
மாட்டுக்கார வேலன்  
தாயின் மடியில்
உழைக்கும் கரங்கள் 
மந்திரி குமாரி  
பரிசு

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்  அந்த வரிசையில்முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து,  இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
விடைக்கான திரைப்படத்தின் பெயர்  உட்பட அனைத்து திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவையாக அமைந்துள்ளதை காணலாம்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 1 க்கான விடை: முதல் மரியாதை.  

சரியான விடையை அனுப்பியவர்கள்: Rajesh Durairaj , மனு, யோசிப்பவர், 
சாந்தி நாராயணன், MeenuJai , சுதாகர், லாவண்யா. 

இவர்கள் அனைவர்க்கும் நன்றி. வாழ்த்துகள்.     
ராமராவ்

No comments:

Post a Comment