Friday, September 28, 2012

சொல் வரிசை - 4

கீழே ஏழு  திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 .     அனுபவி ராஜா அனுபவி    
2 .     பயணங்கள் முடிவதில்லை          
3 .     நிச்சய தாம்பூலம்    
4 .     நல்லவனுக்கு நல்லவன்     
5 .     வல்லவன் ஒருவன்   
6 .     தேடி வந்த மாப்பிள்ளை   
7 .     தூறல் நின்னு போச்சு  
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு  பாடலின் முதல் இரண்டு வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.   

குறிப்பு  (CLUE):

1 .  1-வது சொல் ஒரு ரத்தினம்.
2 .  3-வது சொல் நேரத்தையும் குறிக்கும். 
3 .  5-வது சொல்லும் 6-வது சொல்லும் ஒன்றே.      
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள்:      திரைப்படத்தின் பெயர், தொடக்கச்சொல், சொல்வரிசை பாடல் வரிகள்,
அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் 
பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 

                                                 * * * * * * * *
சொல் வரிசை - 3 க்கான விடைகள்: 
திரைப்படம்                                       பாடலின் தொடக்கம்                                          தொடக்கச் சொல்

மூன்று முடிச்சு                                      ஆடி வெள்ளி தேடி உன்னை                          ஆடி
வீராப்பு                                                      போனா வருவீரோ                                            போனா    
தொட்டதெல்லாம் பொன்னாகும்     ஆவணி மலரே ஐப்பசி மழையே                  ஆவணி   
வாரணம் ஆயிரம்                                அவ என்னை என்னை தேடி வந்த             அவ  
கன்னி ராசி                                             ஆள அசத்தும் மல்லியே மல்லியே           ஆள   
குலேபகாவலி                                        மயக்கும் மாலை பொழுதே நீ போ போ      மயக்கும் 
சண்டக்கோழி                                         தாவணி போட்ட தீபாவளி வந்தது ஏன்    தாவணி 


மேலே உள்ள ஏழு  தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்

ஆடி போனா ஆவணி - அவ   
ஆள மயக்கும் தாவணி   

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அட்டகத்தி.  

எல்லா விடைகளையும் இருவர் மட்டுமே அனுப்பி இருந்தார்கள்.   Madhav, லாவண்யா.  இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள். 

வேறு யாரும் முயற்சித்ததாகத் தெரியவில்லை.
குறிப்பில் குறிப்பிட்டிருந்தது போல் ஆடி, ஆவணி இரு தமிழ் மாதங்களின் பெயர்கள். 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
ராமராவ்

1 comment:

  1. Madhav ,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. ஒரு சிறு திருத்தம். "என்னை" அல்ல. அது "உன்னை"
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete