வணக்கம் நண்பர்களே,
நான் ஒரு தமிழ் சினிமா ரசிகன். தமிழ் சினிமாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். தமிழ் திரைப்படங்களைப் பற்றியும், தமிழ் திரைப்படப் பாடல்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த ஆராய்ச்சியின் விளைவே இந்த திரை ஜாலம்.
தமிழ் திரைப்படங்களில், திரைப்படங்களின் பெயர்களில்,
திரைப்படப்பாடல்களில், வார்த்தை ஜாலங்கள் அமைந்துள்ளன.
அவைகள் தான் இந்த திரை ஜாலத்தில் இடம் பெறப் போகின்றன.
நண்பர்களும் பங்கேற்கும் வகையில் அவைகளை புதிர்களாக அமைக்கப் போகிறேன்.
திரைப்படங்களைப் பற்றியும், அவற்றில் இடம் பெறும் பாடல்களைப்பற்றியும் அறிந்திருப்பது இந்த புதிர்களுக்கு
விடை காண மிகவும் எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.
மேலும் இந்த திரை ஜாலத்தில் பங்கு பெறுவதன் மூலம்
பல திரைப்படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள், பாடல்களின் வரிகள் போன்றவை நண்பர்கள் நன்கு அறிந்து
கொள்ள வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்.
ராமராவ்
No comments:
Post a Comment