வணக்கம் நண்பர்களே,
திரைஜாலத்தில் அடுத்த ஜாலம் எழுத்துப் படிகள். திரைப்படங்களைப் பற்றியது. திரைப்படப் பெயர்களில் இயற்கையாகவே அமைந்த ஜாலத்தை புதிராக அமைத்திருக்கிறேன்.
எழுத்துப் படிகளின் விளக்கம் இதோ:
7 அல்லது அதற்கு மேற்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, மேலும் இப்படியே எழுத்துக்களை சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
எழுத்துப் படிகள் - 1 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
ஆலயமணி
காவல் தெய்வம்
சாதனை
படிக்காத மேதை
பலே பாண்டியா
பாகப்பிரிவினை
முரடன் முத்து
விடைக்கான திரைப்படத்தின் பெயர் இரு சொற்களைக் கொண்டது.
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவையாக அமைந்துள்ளதை காணலாம்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com இ-மெயிலுக்கு அனுப்பலாம்.
ராமராவ்
Rajesh Durairaj,
ReplyDeleteஉங்கள் விடை சரியே. நன்றி. வாழ்த்துகள்.
மனு,
ReplyDeleteஉங்கள் விடை சரியே. நன்றி. வாழ்த்துகள்.
யோசிப்பவர்,
ReplyDeleteசரியான விடை. உங்கள் பாராட்டுக்கு நன்றி. வாழ்த்துகள்.
சாந்தி நாராயணன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. நன்றி. வாழ்த்துகள்.
MeenuJai,
ReplyDeleteஉங்கள் விடை சரி. நன்றி.வாழ்த்துகள்.
லாவண்யா, சுதாகர்,
ReplyDeleteஉங்கள் விடை சரி. வாழ்த்துகள்.