கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . மூன்று முடிச்சு
2 . வீராப்பு
3 . தொட்டதெல்லாம் பொன்னாகும்
4 . வாரணம் ஆயிரம்
5 . கன்னி ராசி
6 . குலேபகாவலி
7 . சண்டக்கோழி
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் இரண்டு வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு (CLUE):
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு (CLUE):
சொல் வரிசை பாடல்: இரு தமிழ் மாதங்களின் பெயர்களைக் கொண்ட
புதுப்படப் பாடல்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள்: திரைப்படத்தின் பெயர், தொடக்கச்சொல், சொல்வரிசை பாடல் வரிகள்,
அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள்
பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 2 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
மறுபடியும் ஆசை அதிகம் வச்சி ஆசை
கண்ணெதிரே தோன்றினாள் கனவே கலையாதே கனவே
அபூர்வ ராகங்கள் அதிசய ராகம் ஆனந்த ராகம் அதிசய
எஜமான் நிலவே முகம் காட்டு நிலவே
பாத காணிக்கை காதல் என்பது எதுவரை காதல்
குலமகள் ராதை உலகம் இதிலே அடங்குது உலகம்
பாக்ய லட்சுமி காண வந்த காட்சி என்ன காண
மெல்ல திறந்தது கதவு வா வெண்ணிலா உன்னை தானே வா
மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்
ஆசை கனவே அதிசய நிலவே
காதல் உலகம் காண வா
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி
எல்லா விடைகளையும் இருவர் மட்டுமே அனுப்பி இருந்தார்கள். Madhav, MeenuJai . இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
வேறு யாரும் முயற்சித்ததாகத் தெரியவில்லை.
குறிப்பில் குறிப்பிட்டிருந்தது போல் ஆசை, காதல் என்ற பெயர்களில் இரு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
ஆசை-1 : ஜெமினி கணேசன், பத்மினி நடித்து 1956 ல் வெளிவந்தது.
ஆசை-2 : அஜித், சுவலட்சுமி நடித்து 1995 ல் வெளிவந்தது.
காதல்-1 : நாகேஸ்வரராவ், பானுமதி நடித்து 1952 ல் வெளிவந்தது.
காதல்-2 : பரத், சந்தியா நடித்து 2004 ல் வெளிவந்தது.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. வாழ்த்துகள்.
லாவண்யா,
ReplyDeleteஉங்கள் விடை சரி. நன்றி. வாழ்த்துகள்.