Sunday, August 21, 2016

சொல் வரிசை - 135


சொல் வரிசை - 135   புதிருக்காக,  கீழே   பத்து (10) திரைப்படங்களின்  பெயர்களும்,   அவைகளில்  ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     ராமன் எத்தனை ராமனடி (---  ---  ---  --- முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்)
  
2.     பவித்ரா (---  ---  ---  ---  --- விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ)

3.     மாடப்புறா (---  ---  ---  துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்) 

4.     பிரிவோம் சந்திப்போம் (---  ---  ---  ---  --- கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை) 

5.     சொக்கத் தங்கம் (---  ---  ---  ---  என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு) 

6.     நெஞ்சில் ஓர் ஆலயம் (---  ---  முதிர்ந்து வந்த முத்தல்லவோ)

7.     தந்துவிட்டேன் என்னை (---  ---  ---  ---  மொத்தமா அச்சம் வெட்கம் விட்டாளம்மா ) 

8.     சிவகாமியின் செல்வன் (---  ---  ---  ---  திங்கள் போல் சிரிக்கும்) 

9.     ஆலயமணி (---  ---  ---  கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா) 

10.   ஜிகர்தண்டா (---  ---  ---  காளைக்கு கண்ண கட்டுனா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
    என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்மா
    படம் : காற்றிலே வரும் கீதம்
    பாடல் வரிகள் :அண்மையில காலமான திரு பஞ்சு அருணாசலம்

    ReplyDelete

  2. 1. ராமன் எத்தனை ராமனடி - சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்

    2. பவித்ரா - செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ

    3. மாடப்புறா - சிரிக்கத் தெரிந்தால் போதும்

    4. பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

    5. சொக்கத் தங்கம் - என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி

    6. நெஞ்சில் ஓர் ஆலயம் - முத்தான முத்தல்லவோ

    7. தந்துவிட்டேன் என்னை - முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா

    8. சிவகாமியின் செல்வன் - என் ராஜாவின் ரோஜா முகம்

    9. ஆலயமணி - கண்ணான கண்ணனுக்கு அவசரமா

    10. ஜிகர்தண்டா - கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சா

    இறுதி விடை :
    சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
    என் முத்தான முத்தம்மா
    என் கண்ணான கண்ணம்மா
    - காற்றினிலே வரும் கீதம்

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 21.8.2016 அன்று அனுப்பிய விடை:

    சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்.. என் முத்தான முத்தம்மா.. (காற்றினிலே வரும் கீதம்)

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 21.8.2016 அன்று அனுப்பிய விடை:

    சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்
    செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
    சிரிக்க தெரிந்தால் போதும்
    கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
    என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
    முத்தான முத்தல்லவோ
    முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா
    என் ராஜாவின் ரோஜா முகம்
    கண்ணான கண்ணனுக்கு
    கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளாம்

    பாடல் : சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா

    திரைப்படம் : காற்றினிலே வரும் கீதம்

    ReplyDelete