எழுத்துப் படிகள் - 160 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 160 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தாய்க்கு ஒரு தாலாட்டு
2. மிருதங்க சக்கரவர்த்தி
3. முதல் மரியாதை
4. தெனாலிராமன்
5. கல்யாணியின் கணவன்
6. விஸ்வரூபம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தெய்வமகன்
ReplyDeleteTheyvamagan
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 10.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதெனாலிராமன்
தாய்க்கு ஒரு தாலாட்டு
விஸ்வரூபம்
முதல் மரியாதை
மிருதங்க சக்கரவர்த்தி
கல்யாணியின் கணவன்
விடை : தெய்வமகன்