Saturday, August 27, 2016

சொல் அந்தாதி - 50 (ஸ்பெஷல்)



தமிழ் திரைப்படப் பாடல்களில் ஒளிந்திருக்கும்  "அந்தாதி "யை வெளிக்கொணர,  கடந்த 2013 ம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கி, இதுவரை  49  சொல் அந்தாதி புதிர்கள் வெளியிட்டுள்ளேன். 

தமிழ் மொழி திரைப்படப் பாடல்களைத் தவிர, வேறு எந்தவொரு இந்திய மொழி திரைப்படப் பாடல்களில், இம்மாதிரி அதிக அளவில் " அந்தாதி " இடம் பெறுவது மிக மிக அரிது என்றே நான் நினைக்கிறேன். தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு.  

1. ஒருமுறை ஒரு "அந்தாதி"யில் இடம் பெற்ற பாடல் மீண்டும் எந்தவொரு " அந்தாதி " யிலும் இடம் பெறாதவாறு புதிர்களை அமைத்து வருகிறேன். 

2. ஒரே அந்தாதி புதிரில் ஒரு குறிப்பிட்ட அந்தாதி சொல் ஒரு முறை மட்டும் இடம் பெறுவதாகவே அமைத்து வருகிறேன். 

3. ஒவ்வொரு அந்தாதி புதிரிலும் (ஸ்பெஷல் புதிர்களை தவிர)       5 / 6 / 7 பாடல்கள் இடம் பெறும். 

4. சொல் அந்தாதி புதிர்  -  10 ல்    18  பாடல்கள் 
    சொல் அந்தாதி புதிர்  -  25 ல்    20  பாடல்கள் இடம் பெற்றன. 

இந்த முறை சொல் அந்தாதி - 50 வது (ஸ்பெஷல்) புதிரில் 24 பாடல்கள் இடம் பெறுகின்றன. 


சொல் அந்தாதி  -   50  (ஸ்பெஷல்) - நீ...ள...மா...ன...து 


சொல் அந்தாதி - 50 (ஸ்பெஷல்) புதிருக்காக, கீழே    24  (இருபத்தி நான்கு)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.   அன்பு                           - எண்ண எண்ண இன்பமே    
2.   எங்கள் குடும்பம் பெரிசு              
3.   பாதாள பைரவி                  
4.   கை கொடுத்த தெய்வம்                 
5.   சொந்தம் 16             
6.   Mr. மெட்ராஸ்               

7.   அம்மா பிள்ளை                  
8.   நெஞ்சிருக்கும் வரை                 
9.   கொண்டாட்டம்     
10.  தங்க மாமா               
11.  குப்பத்து ராஜா                  
12.  பூந்தளிர்                 

13.  பூஜைக்கு வந்த மலர்     
14.  தந்து விட்டேன் என்னை              
15.  மனசெல்லாம்                  
16.  நண்பர்கள்                 
17.  அம்பிகாபதி     
18.  எங்க தம்பி              

19.  ஆயுள் கைதி                  
20.  கண்டேன் காதலை                 
21.  காற்றினிலே வரும் கீதம் 
22.  கொக்கரக்கோ               
23.  சக்கரைப் பந்தல்                  
24.  ஞான ஒளி                 
        
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 23-வது, 24-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, இப்படியே 23-வது, 24-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 

ராமராவ் 

1 comment:

  1. 1. அன்பு '- எண்ண எண்ண இன்பமே
    2. எங்கள் குடும்பம் பெரிசு - எந்நாளும் காணாத ஆனந்தமே
    3. பாதாள பைரவி - ஆனந்தமே தரும் காவனம் இதிலே
    4. கை கொடுத்த தெய்வம் - ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க
    5. சொந்தம் 16 - ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்தேன்
    6. Mr. மெட்ராஸ் - பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்

    7. அம்மா பிள்ளை - போகும் பாதை எங்கே
    8. நெஞ்சிருக்கும் வரை - எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
    9. கொண்டாட்டம் - உன்னோடுதான் கனவிலே நினைவு
    10. தங்க மாமா - இதோ மழை துளி
    11. குப்பத்து ராஜா - கொடி கட்டிப் பறக்குதடி காலம்
    12. பூந்தளிர் - ராஜா சின்ன ராஜா

    13. பூஜைக்கு வந்த மலர் - உன்னை ஊர்கொண்டு அழைக்க
    14. தந்து விட்டேன் என்னை - தென்றல் நீ தென்றல் நீ
    15. மனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்
    16. நண்பர்கள்- என்னுயிரே என்னுயிரே என் மனம் ஏங்குது
    17. அம்பிகாபதி - கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே
    18. எங்க தம்பி - மானே மரகதமே நல்ல திருநாள் இது

    19. ஆயுள் கைதி - பாடுது பாடுது பாட்டு
    20. கண்டேன் காதலை - காற்று புதிதாய் வீசக் கண்டேன்
    21. காற்றினிலே வரும் கீதம் - கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
    22. கொக்கரக்கோ - கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
    23. சக்கரைப் பந்தல் - வேதம் ஒங்க இசை நாதம் ஒங்க
    24. ஞான ஒளி - தேவனே என்னைப் பாருங்கள்


    Congrats. I am speechless on seeing ur efforts. Wish to give more and more like this.

    ReplyDelete