Monday, September 30, 2013

எழுத்துப் படிகள் - 42


எழுத்துப் படிகள் - 42 க்கான அனைத்து திரைப்படங்களும்  ஜெய்சங்கர்  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7)  ஜெய்சங்கர்  நடித்ததே.
எழுத்துப் படிகள் - 42 க்கான திரைப்படங்களின் பெயர்கள்

1. ஊஞ்சலாடும் உறவுகள் 
2. காலம் வெல்லும் 
3. உங்க வீட்டு கல்யாணம்  
4. நாம் மூவர்  
5. பொன்வண்டு     
6. அம்மன் அருள்  
7. பூவே பூச்சூடவா  

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு :

இறுதி விடைக்கான திரைப்படத்தின் கதாநாயகி:    ஜெயலலிதா 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 41 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1. தசரதன்
2. ஏணிப்படிகள்
3. ஆணிவேர்
4. கற்பூர தீபம்
5. உனக்காகவே வாழ்கிறேன்
6. சாமந்திப்பூ
7. கண்மணி ராஜா
 
 
இறுதி விடை:            ஆனந்த ராகம்              

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, மதுமதி

இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

Saturday, September 28, 2013

சொல் அந்தாதி - 3


சொல் அந்தாதி - 3 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  சர்வர் சுந்தரம்                  -  சிலை எடுத்தான் இந்த சின்னப் பெண்ணுக்கு 
2.   புதிய முகம்             
3.   கற்பூரம்  
4.   தாயை காத்த தனயன் 
5.   மணமாலை    

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் அந்தாதி - 2 புதிருக்கான விடைகள்:  
1.    உத்தம புத்திரன்      -  காத்திருப்பான் கமலக் கண்ணன் 
2.    வெண்ணிற ஆடை -  கண்ணன் என்னும் மண்ணா பேரை சொல்ல சொல்ல            
3.    பணமா பாசமா       -  மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல    
4.    கந்தன் கருணை     -  சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா      
5.    அதிசயத் திருடன்    -  முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   Madhav,  மதுமதி 
இவர்கள் இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.        
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Thursday, September 26, 2013

எழுத்து வரிசை - 39


எழுத்து வரிசை புதிர் - 39 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:


1. புலிக் குட்டி? (5,4)                                                 - 1984
 2. பிள்ளையே எனது மாப்பிள்ளை (3,2,5)    - 2010
3. குற்றமற்றவன் (5)                                              - 1984
4. திருப்பதி வாயில் ரயில் சந்திப்பு (5)         -  2009   
5. அவதார புதல்வர்கள் இருவர் (4)               -  1963 
6. அதிர்ஷ்டக்காரன் (5)                                        -  1995
  
 இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை: (3,3)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 38 க்கான விடைகள்:
 
1 தாயக்கட்டையில் விழும் அதிகப்படியான எண் (3,5) - 1982 - பகடை பனிரெண்டு
2 பர்மாவிலிருந்து வந்த கிருஷ்ண பக்தை (4,2) - 1956 - ரங்கோன் ராதா
3 கேடு நினைக்காத அம்மாயிராத பெண் பெரிய மனுஷியாயிட்டா (3,5,5) - 1980 - ராமாயி வயசுக்கு வந்துட்டா 
4 பணக்கார கடவுள் (4,4) - 1973 - திருமலை தெய்வம்
5 ஒவ்வொரு செயலுக்கும் இணையான எதிர் செயல் உண்டு (6,4,2) - 2009 - நியூட்டனின் மூன்றாம் விதி


எழுத்து வரிசை புதிர் விடை -         நிரபராதி   

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, மதுமதி  


இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.


ராமராவ்