Friday, July 19, 2013

எழுத்து அந்தாதி - 5




எழுத்து அந்தாதி - 5 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.    எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சரிதா?  (3)

2.    அன்னையின் பேச்சை மீறாதே! ராமச்சந்திரா  (2,3,4)
3.   கிறித்துவ தேவாலயத்தில் விஜய்  (2)
4.   நிச்சயம் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஜெய்சங்கர் (5)
5.   விஜய் கையில் திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் (6) 
6.    முரளியும் ரேவதியும் தாம் சிறு பிள்ளைகள் என்று சொல்வது   (3,4,3)
7.   சரோஜாதேவிக்கு ஜெமினி தரும் திருமண அன்பளிப்பு  (4,3)

குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 
எழுத்து அந்தாதி - 4 க்கான விடைகள்: 
 

 1.     சிவகுமாரும் சுமித்ராவும் வளர்க்கும் சிறு பறவை  (7)                         -   சிட்டுக்குருவி 
2.     ஆகாயம் கடக்க அழைப்பது சிம்பு    (4,3,4)                                          -    விண்ணைத் தாண்டி வருவாயா  
3.   ------  நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்! சுனைனா  (4)           -    யாதுமாகி     
4.   நீலகிரியில் அர்ஜுன் (2)                                                                    -    கிரி 
5.   குழந்தைகளுக்கு, மூன்று சக்கர வண்டியோட்டும் சத்யராஜ் (3,2) -    ரிக் ஷா மாமா      
6.     நந்தா பெரியசாமியைப் பற்றி வேறு மாதிரியாக எண்ணு   (3,2)       -    மாத்தி யோசி 
 
 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, நாகராஜன், வைத்தியநாதன், 10அம்மா, Kicha, மதுமதி.
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

ராமராவ் 

5 comments:

  1. மதுமதி,

    எல்லா விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    எல்லா விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. யோசிப்பவர்,

    எல்லா விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. 10அம்மா,

    எல்லா விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. முத்து,

    உங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete