எழுத்துப் படிகள் - 32 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (2,5) ஜெமினி கணேசன் நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், பிரபலமான பாடலின் வரிகளில் கொஞ்சம் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும்.
1. சாவித்திரியும், விஜயகுமாரியும் காலடியில் இடும் தட்சணை (2,4)
(பூஜைக்கு வந்த மலரே வா )
2. அந்தப் பெண்ணுக்கு (பாரதிக்கு) என்று ஒரு விருப்பம் (7,2,3)
(உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் )
3. சாவித்திரியுடன் கல்யாணம் (5)
(தங்க நிலவில் கண்களிரண்டு துள்ளித் திரிவதுண்டோ)
4. முருகன் (சிவகுமார்) அருள் (4,3)
(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும் )
5. பல பெண்களை மயக்கி, மணந்து பின் அது தானல்ல என்பது (2,5)
(மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ)
6. அன்றுபோல் இன்றில்லை, நிறைய மாற்றங்களாகிவிட்டன (3,3,3)
(மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ)
6. அன்றுபோல் இன்றில்லை, நிறைய மாற்றங்களாகிவிட்டன (3,3,3)
(ஏரு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே, உன் துன்பமெல்லாம் தீருமே அண்ணே சின்னண்ணே )
7. நீதிபதியின் சிறந்த தீர்மானம் (3,4)
(வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் )
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
5. இதே தலைப்பில் 3 திரைப்படங்கள் வந்துள்ளன.
6. இதே தலைப்பில் 2 திரைப்படங்கள் வந்துள்ளன.
இறுதி விடைக்கான திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் நடித்திருந்தார்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 31 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. அறுபடைவீடு (3) - பழனி
(சந்தன வாடையடிக்குது )
2. அதிகாலையில் தோன்றும் சுக்கிரன் (5) - விடிவெள்ளி
(கொடுத்துப் பார் பார் பார் உந்தன் அன்பை )
3. அன்னைக்கொரு ஆராரோ (4,2,4) - தாய்க்கு ஒரு தாலாட்டு
(தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என்னாசை சின்னம்மா)
4. யாருக்கும் பணியாதவன் (6) - வணங்காமுடி
(மோகனப் புன்னகை வீசிடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே )
5. புண்ணியத்தால் அடைந்த புத்திரன் (8) - தவப்புதல்வன்
(உலகின் முதல் இசை தமிழிசையே )
6. மும்மூர்த்திகள் (3,6) - மூன்று தெய்வங்கள்
(உலகின் முதல் இசை தமிழிசையே )
6. மும்மூர்த்திகள் (3,6) - மூன்று தெய்வங்கள்
(வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ )
7. எமது மொழி எமது ஜனங்கள் (2,3,2,4) - என் தமிழ் என் மக்கள்
(தமிழ் எங்கள் உயிரானது + ஒரு தாய் மக்கள் நாமென்போம்)
இறுதி விடை: படிக்காதவன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, Suji, முத்து, 10அம்மா, யோசிப்பவர், பாலகணேஷ், கீதா, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.