எழுத்துப் படிகள் - 33 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,4) சிவாஜி கணேசன் நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், கொஞ்சம் அதிகப்படியான குறிப்புகள் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தக் குறிப்புகள், அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும்.
1. ஜெயலலிதாவின் நேசத்தை நாடி (4,2)
(சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் )
2. ரகுராமன், பலராமன், ஜெயராமன், ஸ்ரீராமன், சீதாராமன் ..... (3,4,4)
(நல்லவர் வணங்கும் தேவனடி )
3. பொதுவான பேரரசன் (4,8)
(முதலாவது ஆங்கிலச் சொல், படைத்தலைவரையும் குறிக்கும்)
4. பள்ளி செல்லாத பெருநிலக்கிழார் (5,5)
(K.S.கோபாலகிருஷ்ணன் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம் )
5. தலையைக் கொய்த, நீண்ட ஆயுளைப் பெற்றவர் (5)
(இந்தப் பெயரில் ஒரு அரசியல்வாதி நடிகர் இருக்கிறார் )
6. கொஞ்சம் மாற்றினாலும் பாண்டிய வீரன், மாறாத மாறன் (2,5)
(இந்தப் பெயரில் ஒரு அரசியல்வாதி நடிகர் இருக்கிறார் )
6. கொஞ்சம் மாற்றினாலும் பாண்டிய வீரன், மாறாத மாறன் (2,5)
(ஒரு அரசியல்வாதி நடிகரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் )
7. ஊரைக் காக்கும் கடவுள் (3,4)
(மதுரை வீரன், அய்யனார், கருப்பண சாமி ... )
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, மாதவி நடித்திருந்தார்கள்.
சிவாஜி கணேசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 32 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. சாவித்திரியும், விஜயகுமாரியும் காலடியில் இடும் தட்சணை (2,4) - பாத காணிக்கை
(பூஜைக்கு வந்த மலரே வா )
2. அந்தப் பெண்ணுக்கு (பாரதிக்கு) என்று ஒரு விருப்பம் (7,2,3) - அவளுக்கென்று ஓர் மனம்
(உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் )
3. சாவித்திரியுடன் கல்யாணம் (5) - திருமணம்
(தங்க நிலவில் கண்களிரண்டு துள்ளித் திரிவதுண்டோ)
4. முருகன் (சிவகுமார்) அருள் (4,3) - கந்தன் கருணை
(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும் )
5. பல பெண்களை மயக்கி, மணந்து பின் அது தானல்ல என்பது (2,5) - நான் அவனில்லை
(மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ)
6. அன்றுபோல் இன்றில்லை, நிறைய மாற்றங்களாகிவிட்டன (3,3,3) - காலம் மாறிப் போச்சு
(மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ)
6. அன்றுபோல் இன்றில்லை, நிறைய மாற்றங்களாகிவிட்டன (3,3,3) - காலம் மாறிப் போச்சு
(ஏரு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே, உன் துன்பமெல்லாம் தீருமே அண்ணே சின்னண்ணே )
7. நீதிபதியின் சிறந்த தீர்மானம் (3,4) - நல்ல தீர்ப்பு
(வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் )
இறுதி விடை: பாவ மன்னிப்பு
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, 10அம்மா, யோசிப்பவர், வைத்தியநாதன், மதுமதி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
வைத்தியநாதன்,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள் நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.