எழுத்து வரிசை புதிர் - 30 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 வாழ்நாள் முழுதும் சிறைக் குற்றவாளியான பிரபு (3,2)
2 Cowboy பாலையா சொன்ன வார்த்தை சும்மா இல்லை (3,5)
3 திசையறியா வனத்தில் ஜெயலலிதா (4,4,4)
4 அம்பை ரவிமீது எய்யும் ரஜினி (3)
5 நாடி ஜோசியத்துக்கு பெயர் பெற்ற சரத் குமார் (7)
6 மீனா திறந்த மனக் கதவு (3,3)
7 மறுபடியும் பாடலின் முதலடியை தொடங்கும் ஜெய்சங்கர் (4,4)
8 காத்தவராயன் சின்னப்பாவின் காதலி (5)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை (4,4). சத்யராஜ் கதாநாயகனாக நடித்த திரைப்படம்.
. :
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 29 க்கான விடைகள்:
1 யாருக்கும் கிடைக்காத யானை (3) - கும்கி
2 நடுஜாமத்தில் திரும்பிய ஆனந்தத்தில் விக்ரம் (2) - மஜா
3 சாலை நடுவே நடக்காதே ருக்குமணி! வண்டி வருது (3,1) - ஓரம் போ
4 தாஜ்மகால் நகர் (3) - ஆக்ரா
5 முகமதிய மன்னன் ராமசாமி (4,2,4) - முகமது பின் துக்ளக்
6 உடன்பிறந்தவள் (4) - சகோதரி
எழுத்து வரிசை புதிர் விடை - போக்கிரி ராஜா

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Suji, Kicha, 10அம்மா, Madhav, யோசிப்பவர், மதுமதி, கீதா
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.
மதுமதி,
ReplyDeleteஅனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.