Tuesday, July 30, 2013

சொல் வரிசை - 34



கீழே   7 (ஏழு )  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.    கன்னிப் பருவத்திலே                  ( ------  வண்ண ரோசாவாம் பாத்தா கண்ணு மூடாதாம்)
2.    நிச்சய தாம்பூலம்                     (  ------  தாவணியில் பார்த்த உருவமா)
3.    குமரிக் கோட்டம்                      ( -------  அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா)
4.    என் ஜீவன் பாடுது                     (  -------  வச்சுக்கோ எந்தன் அன்பு மனச )
5.    போஸ்                                           ( --------  கண் வைத்தது தானோடி) 
6   பரிசு                                                ( -------- கருப்பு குங்குமம் சிவப்பு )
7.    கல்லும் கனியாகும்                 ( -------- நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே )
 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 33 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                  

1.     தென்றலே என்னைத் தொடு      ( தென்றல் வந்து என்னைத் தொடும் )
2.     திருப்பாச்சி                                  ( நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்லே )
3.     ஈரமான ரோஜாவே                     ( தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு )
4.     குட்டி                                            ( நீ காதலிக்கும் பொண்ணு காதளிக்கலேன்னா கவலைப்படாதே )
5.     பவுனு பவுனுதான்                       ( தேதி ஒண்ணு பாத்திருக்கேன் சேதி சொல்லி காத்திருக்கேன்) 
6    பெண்                                           ( சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா )
7.     இறைவன் கொடுத்த வரம்         ( மங்கை என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் )
8.     போக்கிரி                                     ( நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் )
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

தென்றல் நீ  தென்றல் நீ  
தேதி சொன்ன மங்கை நீ                 

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      தந்து விட்டேன் என்னை          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி       

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Sunday, July 28, 2013

எழுத்து வரிசை - 31


எழுத்து வரிசை புதிர் - 31 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1   ராதிகா கால்விரலில் அணிந்த வளையம் (3)                    -  1982  
2   உணவளித்த கரம் எம்ஜியாருடையது.  (6,1)                       -  1972  
3   ஒளியை நோக்கி வருமாறு அழைப்பது ராஜேஷ் (8,3)    -  1981
4   அக்காளிடம் தெய்வத்தைக் காணும் ரஜினி  (2)                -  1980
5   பணக்கார மணாளன் விஜயகாந்த்  (3)                                 -  2002
6   தேவிகா கள்ளம் கபடம் இல்லாதவள்?   (4,2)                     -  1971  
7   சிவா(ஜி) கழுத்திலிருந்து பாம்பு கேட்டது  (3,5)                  -  1982 

 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
  
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை  (4,3).  1962ல்  வெளிவந்த திரைப்படம்.      
.  :
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 30 க்கான விடைகள்: 
 
 1   வாழ்நாள் முழுதும் சிறைக் குற்றவாளியான பிரபு (3,2)                     -  ஆயுள் கைதி  
2   Cowboy பாலையா சொன்ன வார்த்தை சும்மா இல்லை (3,5)             -   வெறும் பேச்சல்ல 
3   திசையறியா வனத்தில் ஜெயலலிதா (4,4,4)                                   -   திக்குத் தெரியாத காட்டில் 
4   அம்பை ரவிமீது எய்யும் ரஜினி (3)                                                               -   பைரவி  
5   நாடி ஜோசியத்துக்கு பெயர் பெற்ற சரத் குமார் (7)                               -   வைத்தீஸ்வரன் 
6   மீனா திறந்த மனக் கதவு   (3,3)                                                                       -   இதய வாசல்   
7   மறுபடியும் பாடலின் முதலடியை தொடங்கும் ஜெய்சங்கர் (4,4)  -   மீண்டும் பல்லவி 
8   காத்தவராயன் சின்னப்பாவின் காதலி (5)                                    -   ஆரியமாலா 

எழுத்து வரிசை புதிர் விடை -         வில்லாதி வில்லன்           
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்முத்து, Madhav, மதுமதி.       
  
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
 
ராமராவ்