Sunday, October 28, 2012

எழுத்துப் படிகள் - 7

எழுத்துப் படிகள் - 7 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை
1 . குல கண்ணியம்
2 . பாசத்துக்கொரு தமையன்
3 . பிறரிடம் பணம் பெற்று நடந்த திருமணம்
4 . கண்டால் வயிறு நிறைந்துவிடும்
5 . இரண்டு வரிகள்
6 . தங்க உருவம்
7 . மேன்மக்கள்

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின்   3- வது எழுத்து என்றுஅப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.


விடைக்கான திரைப்படமும் ஜெமினி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 6 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 குங்குமம்
2 ஆலயமணி
3 பாசமலர்
4 மணமகன் தேவை
5 அந்த நாள்
6 சம்பூர்ண ராமாயணம்
7 படிக்காத மேதை
இறுதி விடை: குலமகள் ராதை

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முகிலன், 10அம்மா
 
குறிப்புகளின் விடைகளில் 7 ல் 5 க்கு சரியான விடைகளை அனுப்பியவர்: முத்து

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

Friday, October 26, 2012

சொல் வரிசை - 8

கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . முதல்வன்
2 . மம்பட்டியான்
3 . கோபுரவாசலிலே
4 . அங்காடித்தெரு
5 . பேரும் புகழும்
6 . வானத்தைப்போல
7 . இரு கோடுகள் 
 

ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.


குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்: தங்கை, அண்ணன்கள் பாடியது.
பாடல் காட்சியில் நடித்தவர்களில் ஒருவர்: முரளி


சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 7 க்கான விடைகள்:
திரைப்படம்                                              பாடலின் தொடக்கம்                                           தொடக்கச் சொல்

1 . ஊட்டி வரை உறவு                              புது நாடகத்தில் ஒரு நாயகி                                 புது
2 . பதி பக்தி                                                வீடு நோக்கி ஓடி வந்த என்னையே                  வீடு
3 . பாவ மன்னிப்பு                                      வந்த நாள் முதல் இந்த நாள் வரை                 வந்த
4 . தாய் மீது சத்தியம்                               நேரம் வந்தாச்சு                                                     நேரம்
5 . திருமாங்கல்யம்                                  பொன்னான மனம் எங்கு போகின்றது                பொன்னான
6 . தனிப்பிறவி                                           நேரம் நல்ல நேரம்                                                 நேரம்
 


மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: எங்க பாப்பா

எல்லா விடைகளையும் அனுப்பியவர்: Madhav
இவருக்கு நன்றி. வாழ்த்துகள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
ராமராவ்

Tuesday, October 23, 2012

எழுத்து வரிசை - 4


எழுத்து வரிசை புதிர் - 4 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 
1 கமல் என்ற காமதேவனின் கணை
2 சூர்யா சூரியன்?
3 விஜய் ஒரு பறவை
4 அரவிந்த சாமியின் மூச்சு வாயுவே
5 பாக்கியராஜுக்காக காலைப் பொழுதை எதிர்நோக்கு
6 நிலவு முகத்தவள் ஜோதிகா
7 தனுஷின் விளையாட்டு மைதானம்


இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.comமின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
 
எழுத்து வரிசை - 3 க்கான விடைகள்:


1 நவரத்தினங்களில் ஒரு ராஜ்கிரண் - மாணிக்கம்
2 திரிஷா தான் எல்லாம் - சர்வம்
3 செந்திலுக்கு பெண் பார்க்கப் போகும் ரஜினி - படையப்பா
4 பத்மப்பிரியா! அமைதியாய் இரு - சத்தம் போடாதே
5 ரஜினியின் கோல் மால் - தில்லுமுல்லு
6 லைலாவின் பிரஷாந்த் - மஜ்னு

எழுத்து வரிசை புதிர் விடை - தேனும் பாலும் 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai
இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.



ராமராவ்

Sunday, October 21, 2012

எழுத்துப் படிகள் - 6

எழுத்துப் படிகள் - 6 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . தமிழ் வார பத்திரிகை
2 . கோவிலை அடைந்த நேரம்
3 . அன்பான பூப்போன்ற தங்கை சாவித்திரி
4 . பானுமதிக்கு வரன் வேண்டும்
5 . அன்றைய தினம்
6 . இதிகாசங்களுள் ஒன்று
7 . பள்ளி செல்லாத அறிவாளி 
 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வதுஎழுத்து என்றுஅப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்

விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 5 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 நாடோடி மன்னன்
2 காஞ்சித்தலைவன்
3 நம் நாடு
4 ஆயிரத்தில் ஒருவன்
5 பணத்தோட்டம்
6 பாக்தாத் திருடன்
7 காவல்காரன்
இறுதி விடை: நவரத்தினம்

சரியான விடையை அனுப்பியவர்: Madhav
70% விடைகளை அனுப்பியவர்: சாந்தி நாராயணன்
இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

Friday, October 19, 2012

சொல் வரிசை - 7

கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 .   ஊட்டி வரை உறவு
2 .   பதி பக்தி
3 .   பாவ மன்னிப்பு
4 .   தாய் மீது சத்தியம்
5 .   திருமாங்கல்யம்
6 .   தனிப்பிறவி 
    
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.  

குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்: இருவர் பாடியது. (டூயட்).
பாடல் காட்சியில் நடித்தவர்களில் ஒருவர்: ரவிச்சந்திரன்  
 

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 6 க்கான விடைகள்:
திரைப்படம்                                               பாடலின் தொடக்கம்                                தொடக்கச் சொல்

1 இப்படியும் ஒரு கங்கை                      சோலை புஷ்பங்களே                                            சோலை
2 காதல் ஓவியம்                                      பூவில் வண்டு கூடும் கண்டு                                பூவில்
3 ரௌத்திரம்                                                மாலை மங்கும் நேரம்                                          மாலை
4 பிரண்ட்ஸ்                                                 தென்றல் வரும் வழியை பூக்கள்                      தென்றல்
5 நான் பாடும் பாடல்                               பாடும் வானம்பாடி                                                   பாடும்
6 மீனவ நண்பன்                                        நேரம் பௌர்ணமி நேரம்                                       நேரம் 
  
மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

சோலை பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: வெள்ளை ரோஜா

எல்லா விடைகளையும் அனுப்பியவர்: Madhav
இவருக்கு நன்றி. வாழ்த்துகள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
ராமராவ்