சொல் வரிசை - 163 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கொடுத்து வைத்தவள் (--- --- எப்படி இருக்குது மனசு)
2. அரசிளங்குமரி (--- --- --- --- சேதி கேளடா)
3. நல்ல இடத்து சம்பந்தம் (--- --- --- --- ஜிகுஜிகு வண்டியிலே)
4. பிரியமானவளே (--- --- என் வசம் நானில்லை)
5. கழுகு (--- --- --- --- மனம் காணும் இன்பம் யோகம் என்றது)
6. சின்னக் கவுண்டர் (--- --- --- --- --- உனக்கு சுத்தி போட வேணுமய்யா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
ReplyDelete1. கொடுத்து வைத்தவள் - என்னம்மா சௌக்கியமா
2. அரசிளங்குமரி - சின்னப் பயலே சின்னப் பயலே
3. நல்ல இடத்து சம்பந்தம் - பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது
4. பிரியமானவளே - என்னவோ என்னவோ
5. கழுகு - தேடும் தெய்வம் நேரில் வந்தது
6. சின்னக் கவுண்டர் - கண்ணு படப் போகுதைய்யா சின்னக் கவுண்டரே
இறுதி விடை:
என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
- நான் ஏன் பிறந்தேன்
by
மாதவ்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 22.3.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. என்னம்மா செளக்யமா
2. சின்னப்பயலே சின்னப்பயலே
3. பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது
4. என்னவோ என்னவோ
5. தேடும் தெய்வம் நேரில் வந்தது
6. கண்ணு பட போகுதய்யா சின்ன கவுண்டரே
என்னம்மா சின்ன பொண்ணு என்னவோ தேடும் கண்ணு
திரைப்படம்: நான் ஏன் பிறந்தேன்