சொல் அந்தாதி - 43 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உயர்ந்த மனிதன் - வெள்ளிக் கிண்ணம் தான்
2. மயங்குகிறாள் ஒரு மாது
3. கவிக்குயில்
4. ஆடவந்த தெய்வம்
5. சபாஷ் மீனா
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://mymazaa.com/tamil/audiosongs |
http://www.google.com
ராமராவ்
1. உயர்ந்த மனிதன் - வெள்ளிக் கிண்ணம் தான்
ReplyDelete2. மயங்குகிறாள் ஒரு மாது - சுகம் ஆயிரம் என் நினைவிலே
3. கவிக்குயில் - ஆயிரம் கோடி காலங்களாக
4. ஆடவந்த தெய்வம் - கோடி கோடி இன்பம் தரவே
5. சபாஷ் மீனா - செல்வம் நிலையல்லவே இந்த செல்வம் நிலையல்லவே
- மாதவ்
திரு R.வைத்தியநாதன் 26.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1 வெள்ளிக் கிண்ணம் தான் .......................அது தான் சுகம்
2 சுகம் ஆயிரம் ................சுகம் ஆயிரம்
3 ஆயிரம் கொடு காலங்களாக .......................ஆயிரம் கோடி
4 கோடி கோடி இன்பம் பெறவே .............. தேடி வந்த செல்வம்
5 ????