எழுத்து வரிசை புதிர் - 24 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 சின்னாளப்பட்டி சேலையில் சினேகா (3)
2 இங்கிலாந்து தலைநகரில் பிரஷாந்த் (4)
3 இன்றே காதல் செய்! விஜய் (2,2)
4 இந்நாளைப் போல் எந்நாளும் இருக்க வாழ்த்தும் எம்.ஜி.ஆர் (3,2,4,3)
5 "முருகா காப்பாற்று" என வேண்டும் கரண் (5,3)
6 பக்கத்து இல்ல மங்கை அஞ்சலிதேவி (4,4,2)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை (2,4) இந்த பாடலை நினைவுறுத்தும். . :
"நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது"
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 23 க்கான விடைகள்:
1 கமலின் ஏழ்மையின் வண்ணம் செம்மை (5,3,4) - வறுமையின் நிறம் சிவப்பு
2 அஜீத்தின் மணிமுடி (4) - கிரீடம்
3 பாக்கியராஜின் இல்லத்தில் விழா ! (3,5) - வீட்ல விசேஷங்க
4 ஜெய்சங்கரைக் கண்டு நடனமிடு நாகமே (2,3) - ஆடு பாம்பே
5 தனுஷின் லீலைகள் தொடக்கம் (7,5) - திருவிளையாடல் ஆரம்பம்
6 சத்யராஜ் வசிக்கும் சென்னை - 600040, 1வது வீதி (6,3,2) - அண்ணாநகர் முதல் தெரு
7 விஷ்ணு பங்கு பெறும் ஒளிமிக்க விளையாட்டுக் கட்சி (4,3,2) - வெண்ணிலா கபடி குழு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, யோசிப்பவர், வைத்தியநாதன், 10அம்மா, சாந்தி நாராயணன்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
வைத்தியநாதன்,
ReplyDeleteஎல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஎல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஎல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.
சாந்தி நாராயணன்,
ReplyDeleteஎல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.