எழுத்து வரிசை புதிர் - 21 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 முதலும் முடிவும் ஒன்றான திருத்தலத்தில் அஜீத் (5)
2 முதலும் முடிவும் ஒன்றான வெடி நகரில் விஜய் (4)
3 சந்தோஷ்! பொருள் மாறாது பெயரை மாற்றி அழை பிரபு (4)
4 ஜலந்தர் மாநகரில் இருக்கும் விஜயகாந்த் (3)
5 பார்த்திபனுக்கு வலிமை அளிப்பாயோ (4,3)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டு பிடிக்க கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளில் கொஞ்சம் கலாய்த்திருக்கிறேன்.
எழுத்து வரிசைக்கான விடை (3,2) கண்டுபிடிக்க கொஞ்சம் வேறுவிதமாக சிந்திக்க வேண்டும். :
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 20 க்கான விடைகள்:
1 சத்யராஜின் திருமண களேபரம் (4,4) - கல்யாண கலாட்டா
2 முத்துராமன், மஞ்சுளா உட்பட அனைவரும் உத்தமரே (5,5) - எல்லோரும் நல்லவரே
3 விஜயகாந்த், மகாத்மா உதித்த பூமி (3,4,2) - காந்தி பிறந்த மண்
4 திருநெல்வேலி நதியில் விஷால் (6) - தாமிரபரணி
5 சிவாஜியின் கிரீன் சிக்னல் (3,4) - பச்சை விளக்கு
எழுத்து வரிசை புதிர் விடை - ரேணிகுண்டா
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, யோசிப்பவர், Suji, வைத்தியநாதன்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள் நன்றி.
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே பாராட்டுக்கள் நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே பாராட்டுக்கள் நன்றி
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.