கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. குழந்தைக்காக (----- மாத மேகம் இங்கு தரையில் ஆடுது)
2. நீல மலர்கள் (------ ஒரு பூ மலரும் அல்லிப்பூ)
3. குமுதம் ( ---- ஆனவரே சௌக்கியமா உங்கள் கண்ணான பொன்மயிலும் சௌக்கியமா )
4. பெரிய இடத்துப் பெண் ( ---- வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா)
5. மனிதன் மாறவில்லை ( ---- யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏனோ)
6. அக்கரைப் பச்சை ( ---- போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 23 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. கிராமத்து மின்னல் (நீ போகும் பாதையில்)
2. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (எங்கே எனது கவிதை)
3. சிட்டுக்குருவி ( என் கண்மணி காதலி )
4. உத்தம புத்திரன் ( அன்பே அமுதே அருங்கனியே)
5. நல்ல முடிவு ( நீயின்றி நானில்லை வாடா ரங்கய்யா)
6. புதிய பூமி ( நான் உங்க வீட்டு பிள்ளை )
7. அஜந்தா ( எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
நீ எங்கே என் அன்பே
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
நீ எங்கே என் அன்பே
நீயின்றி நான் எங்கே
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: சின்ன தம்பி
எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav, யோசிப்பவர்
இரூவருக்கும நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav,
ReplyDeleteசரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி
Suji,
ReplyDeleteசரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி
யோசிப்பவர்,
ReplyDeleteசரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி
10அம்மா,
ReplyDeleteசரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்துமே சரியானவை. பாராட்டுக்கள் நன்றி.
சாந்தி நாராயணன், ,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.