Tuesday, May 21, 2013

எழுத்துப் படிகள் - 25



எழுத்துப் படிகள் புதிர்களின்  எண்ணிக்கை 24 ஐத் தாண்டி 25 ஐத் தொட்டிருக்கிறது. நண்பர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று விடைகளை அனுப்பி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எழுத்துப் படிகள் - 25 வது புதிர் கொஞ்சம் வித்தியாசமானது.  
    
எழுத்துப் படிகள் - 25 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி   கணேசன்   நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (5,5) மட்டும் வேறு ஒரு பிரபல நடிகர் கதாநாயகனாக நடித்தது.  
 
மேலும் வழக்கம் போன்ற குறிப்புகளுடன்,   பிரபலமான பாடல் ஒன்றும் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தப் பாடல் அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடலாகவோ அல்லது திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   பாராட்டப்படும் கண்ணழகி நடிகை . (3,2)
      (சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி)   
2.   மயங்கவைக்கும் புன்சிரிப்பு    (4,4)
      (----- ----- வீசிடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே)  
3.   இது ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள்  (5,5)
      (சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்)
4.   பெண்ணுக்கு வரன் வேண்டும் (5,2)
      (பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே)
5.    இந்திய இல்லம் ?  (3,3)
       (இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு) 
6.     பள்ளி செல்லாதவன் ?  (7)
       (ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி)
7.    சிவலீலை  (7)
       (பாட்டும் நானே பாவமும் நானே)   
8.    திருமண ஒப்பந்த சடங்கு   (4,5)
       (பாவாடை தாவணியில் பார்த்த உருவமா)
9.    அரசரும் சிறியவரும் (5,5)
        (மன்னவனே மன்னவனே மனசுக்கேத்த சின்னவனே)
10.   காமராஜர் பற்றி சாவி எழுதிய புத்தகம்  (6,4)
       
(அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி)

 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  10-வது படத்தின் 10-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் அந்த திரைப்படத்தின் கதாநாயகனையும் கண்டு பிடிக்க வேண்டும் 
சிவாஜி கணேசன்   நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
 
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 24 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1. சம்பள நாள்    (3,2)                                                                   -  முதல் தேதி 
2. நவரத்தினங்களில் ஒன்று   (5)                                        -   மரகதம் 
3. மருத்துவர் மரியாதை இழந்த சிவாஜி  (4,2)            -  டாக்டர் சிவா 
4. முருகன் அருள்  (4,3)                                                              -  கந்தன் கருணை  
5.  யாருக்கும் தலை பணியாத அரசன் (6)                      - வணங்காமுடி 
6. ஸ்ரீராமன் போன்ற நற்குணம் கொண்ட புதல்வன்  (4,5) - உத்தம புத்திரன் 
7. இப்படி நடக்கும் என்று முன் அறியாதது  (7)          - எதிர்பாராதது 
 
இறுதி விடை:   முரடன் முத்து     
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  முத்து,  Madhav, வைத்தியநாதன், Hari, 10அம்மா, சாந்தி நாராயணன்      
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 
ராமராவ்

6 comments:

  1. சாந்தி,

    விடைகளை சரியாக கண்டுபிடித்து அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.

    நீங்கள் குறிப்பிட்டிருந்த

    "புதிர் சுவையாக இருந்தது. ஒரு சில படங்களுக்கு மட்டும் தேட வேண்டி யிருந்தது. தாங்கள் கொடுத்திருந்த சுட்டி மிகவும் உதவியாக இருந்தது!"

    கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. சபாஷ் மீனா
    மோகனப் புன்னகை
    நல்லதோர் குடும்பம்
    மணமகன் தேவை
    பாரதவிலாஸ்
    படிக்காதவன்
    திருவிளையாடல்
    நிச்சய தாம்பூலம்
    மன்னவரு சின்னவரு
    சிவகாமியின் செல்வன்


    சகலகலா வல்லவன்

    ReplyDelete
  4. யோசிப்பவர்,

    உங்கள் எல்லா விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  5. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  6. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete