எழுத்து வரிசை புதிர் - 23 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 கமலின் ஏழ்மையின் வண்ணம் செம்மை (5,3,4)
2 அஜீத்தின் மணிமுடி (4)
3 பாக்கியராஜின் இல்லத்தில் விழா ! (3,5)
4 ஜெய்சங்கரைக் கண்டு நடனமிடு நாகமே (2,3)
5 தனுஷின் லீலைகள் தொடக்கம் (7,5)
6 சத்யராஜ் வசிக்கும் சென்னை - 600040, 1வது வீதி (6,3,2)
7 விஷ்ணு பங்கு பெறும் ஒளிமிக்க விளையாட்டுக் கட்சி (4,3,2)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை (3,4) ஒரு உம்மைத் தொடர்.
முத்துராமன், சுஜாதா நடித்தது. . :
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 22 க்கான விடைகள்:
1 சுஹாசினியையும் சுலக்க்ஷனாவையும் இணைத்த ராகம் (3,3) - சிந்து பைரவி
2 கார்த்திக்கின் சீடனே ! (3) - சிஷ்யா
3 மாதவனுக்கு இளையவன் (3) - தம்பி
4 ஜெயலலிதாவின் வெள்ளை உடை (4,2) - வெண்ணிற ஆடை
5 எம்.ஜி.ஆரின் அமைச்சர் மகள் (4,3) - மந்திரி குமாரி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, யோசிப்பவர், வைத்தியநாதன், 10அம்மா, Suji, Hari, சாந்தி நாராயணன்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரியானவை. பாராட்டுக்கள். நன்றி.
சாந்தி நாராயணன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரியே. பாராட்டுக்கள். நன்றி.
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரியே. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்துமே சரியானவை. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்களது எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள் நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.