எழுத்துப் படிகள் - 176 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 176 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ராணி லலிதாங்கி
2. ஜஸ்டிஸ் கோபிநாத்
3. கல்யாணியின் கணவன்
4. குடும்பம் ஒரு கோயில்
5. நவராத்திரி
6. வசந்த மாளிகை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
நல்லதம்பி
ReplyDeleteNalla thambi
ReplyDeleteதிரு ஆர்.வைத்தியநாதன் 30.11.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநல்ல தம்பி