எழுத்துப் படிகள் - 175 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,5) சிவகுமார் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 175 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. அன்னை அபிராமி
2. கட்டிலா தொட்டிலா
3. எதற்கும் துணிந்தவன்
4. ராதைக்கேற்ற கண்ணன்
5. சின்னக்குயில் பாடுது
6. அவன் அவள் அது
7. துணையிருப்பாள் மீனாட்சி
8. சாமந்திப்பூ
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ராமன் அப்துல்லா
ReplyDeleteRaman Abdulla
ReplyDelete- Madhav