சொல் வரிசை - 146 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கோபுர வாசலிலே (--- --- --- நவரசம் ஆனதடி)
2. ஆராரோ ஆரிரரோ (--- --- --- --- --- உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை)
3. மேகா (--- --- --- --- கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ)
3. மேகா (--- --- --- --- கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ)
4. பூந்தளிர் (--- --- நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது)
5. ஓடும் நதி (--- --- --- --- --- --- காதல் பருவத்தின் மறுபக்கம் இங்கே)
6. உத்தம புத்திரன் (--- --- --- --- நீதான் என் காதல் மழை)
7. ஞான ஒளி (--- --- --- என் பாவங்கள் தன்னை வாங்கிக் கொள்ளுங்கள்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
1. கோபுர வாசலிலே - நாதம் எழுந்ததடி கண்ணம்மா
ReplyDelete2. ஆராரோ ஆரிரரோ - என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
3. மேகா - ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
4. பூந்தளிர் - வா பொன்மயிலே
5. ஓடும் நதி - வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
6. உத்தம புத்திரன் - என் நெஞ்சு சின்ன இலை
7. ஞான ஒளி - தேவனே என்னை பாருங்கள்
இறுதி விடை :
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
- காதல் ஓவியம்
By Madhav