சொல் அந்தாதி - 34 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சாந்தி நிலையம் - இயற்கை என்னும் இளைய கன்னி
2. அந்த 7 நாட்கள்
3. உதய கீதம்
4. பூமகள் ஊர்வலம்
5. வெற்றி விழா
6. தங்கப்பதுமை
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, 6-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, 6-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
ராமராவ்
1. சாந்தி நிலையம் - இயற்கை என்னும் இளைய கன்னி
ReplyDelete2. அந்த 7 நாட்கள் - எண்ணி இருந்தது ஈடேற
3. உதய கீதம் - பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே
4. பூமகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
5. வெற்றி விழா - பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
6. தங்கப்பதுமை - இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
திரு ஸ்ரீதரன் துரைவேலு 18.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஎண்ணி இருந்தது ஈடேர
பாடு நிலாவே
மலரே ஒரு வார்த்தை
பூங்காற்று
இன்று நமதுள்ளமே
திரு சுரேஷ் பாபு 24.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. சாந்தி நிலையம் - இயற்கை என்னும் இளைய கன்னி (எண்ணி)
2. அந்த 7 நாட்கள் - எண்ணி இருந்த ஈடேற (பாடு)
3. உதய கீதம் - பாடு நிலாவே தேன் கவிதை (மலரே)
4. பூமகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை பேசு (பூங்காற்று)
5. வெற்றி விழா - பூங்காற்று உன் பேர் சொல்ல (இன்று)
6. தங்கப்பதுமை - இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே..