Saturday, December 19, 2015

சொல் வரிசை 100


திரைஜாலம் - சொல் வரிசை புதிர் 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இதுவரை 99 புதிர்கள் வெளிவந்துள்ளன. இன்று சொல் வரிசை - 100 வது புதிர் வெளியாகிறது. 
 

நான் அறிந்தவரை இந்த மாதிரி புதிர்களை தொடர்ந்து அமைப்பது தமிழ் மொழியில் மட்டுமே சாத்தியம் என்று அறிகிறேன். வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரி திரைப்படப் பாடல்களின் தொடக்கச் சொற்களை மட்டும் எழுத்தில் கொண்டு வேறு ஒரு திரைப்படப் பாடலின் பெயரை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமாக தெரியவில்லை. அப்படி சாத்தியம் என்றாலும் வெகு வெகு சில புதிர்கலையே அமைக்க முடியும் (குறைந்தது 6 சொற்கள்). கன்னட மொழியிலும் ஹிந்தி மொழியிலும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை முடியவில்லை. தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு.  

இந்த சொல் வரிசை - 100 புதிருக்கான விடை  மொத்தம் 16 சொற்களைக் கொண்டது. இந்த விடைக்கான பாடல் தான் இந்த சொல் வரிசை புதிரைத் தொடங்குவதற்கு எனக்கு தூண்டுகோலாக அமைந்தது. 


சொல் வரிசை - 100  புதிருக்காக, கீழே  பதினாறு   (16)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     சின்ன ஜாமீன் (----   ----   ----  ----  அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா)  
2.     சாந்தி நிலையம் (----   ----   ----   பேச்சு வரவில்லை)  
3.     மணப்பந்தல் (----   ----   நின்றதிலே பார்வை இழந்தேன்) 
4.     சவாலே சமாளி (----   ----   ----  சொன்னது என்னை தொடாதே)
5.     பார்த்தேன் ரசித்தேன் (----  ----  ----   சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்)
6.     யார் மணமகன் (----   ----  ----  உன் நினைவில் மலரும் என் நெஞ்சம்)
7.     வளையாபதி (----   ----   மலர் பொய்கை கண்டேன்)
8.     கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (----   ----   ----  ஒரு கணம் போதும்)  

9.     உலகம் சுற்றும் வாலிபன் (----   ----   ----   ----  ஆனந்த கவிதையின் ஆலயம்)  
10.    நினைத்ததை முடிப்பவன் (----   ----   உன்னை ஏமாற்றும்) 
11.    நீ வருவாய் என (----   ----   ----  பூத்திருந்தேன் நீ வருவாயென )
12.    செங்கமலத்தீவு (----  ----  ----   ----   மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்)
13.    கெட்டிக்காரன் (----   ----  ----  கேட்டேன் கேட்காத இசையை)
14.    களத்தூர் கண்ணம்மா (----   ----   ----   மதுவில் சுவை எதற்கு)
15.    கன்னிப்பெண் (----   ----  ----  மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா)
16.    நங்கூரம் (----   ----   நீ இல்லாமல் நான் இல்லையே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

9 comments:

  1. ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை
    அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை
    from தெய்வத்தாய்

    ReplyDelete
  2. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன் நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளியில்லை
    பாடல் இடம் பெற்ற திரைப்படம் : தெய்வத்தாய்

    ReplyDelete
  3. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில்

    ReplyDelete
  4. Wi.l post the answers shortly, before that my hearty congratulations for the 100th. Its a quite a feat. Couldn't believe 3 long years passed . Hats off to you and thanks for making my free times enjoyable.

    ReplyDelete
  5. 1. சின்ன ஜாமீன் - ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா
    2. சாந்தி நிலையம் - பெண்ணைப் பார்த்தும் ஏன்
    3. மணப்பந்தல் - பார்த்து பார்த்து நின்றதிலே
    4. சவாலே சமாளி - நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    5. பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
    6. யார் மணமகன் - நிலவில் மலரும் குமுதம்
    7. வளையாபதி - குளிர் தாமரை
    8. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - இல்லை இல்லை சொல்ல
    9. உலகம் சுற்றும் வாலிபன் - அவள் ஒரு நவரச நாடகம்
    10. நினைத்ததை முடிப்பவன் - கண்ணை நம்பாதே
    11. நீ வருவாய் என - பார்த்து பார்த்து கண்கள்
    12. செங்கமலத்தீவு - மலரை பரிதி தலையில் வைத்தாய்
    13. கெட்டிக்காரன் - பார்த்தேன் பார்க்காத அழகை
    14. களத்தூர் கண்ணம்மா - மலரில் மது எதற்கு
    15. கன்னிப்பெண் - ஒளி பிறந்த போது
    16. நங்கூரம் - இல்லை இல்லை

    இறுதி விடை :
    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
    நிலவில் குளிர் இல்லை
    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
    மலரில் ஒளி இல்லை
    - தெய்வத்தாய்

    ReplyDelete
  6. 1. ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
    2. பெண்ணை பார்த்ததும் என் பேச்சு வரவில்லை.
    3. பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
    4. நிலவைப் பார்த்து சொன்னது என்னை தொடதே
    5. பார்த்தேன் ரசித்தேன் சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
    6. நிலவில் மலரும் குமுதம் உன் நினைவில் மலரும் என் நெஞ்சம்
    7. குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
    8. இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

    9. அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
    10. கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
    11. பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
    12. மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
    13. பார்த்தேன் பார்க்காத அழகை கேட்டேன் கேட்காத இசையை
    14. மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு
    15. ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
    16. இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே



    படம் : தெய்வ தாய்
    இசை : Msv, ராமமூர்த்தி
    பாடல் : வாலி
    பாடியவர் : TMS

    பாடல்:
    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
    நிலவில் குளிர் இல்லை
    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
    மலரில் ஒளி இல்லை

    ReplyDelete
  7. ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை

    தெய்வ தாய்

    Sairngalaa sir? this is my first attempt to answer "sol varisai", so sorry, if the answer is not in the right format you are expecting. do let me know if you need me to include any additional details for the answer-nga sir.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  8. திரு சுரேஷ் பாபு 20.12.2015 அன்று அனுப்பிய விடைகள்:

    ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை, அவள் கண்ணைப்பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை

    படம் தெய்வத்தாய்

    ReplyDelete