சொல் வரிசை - 97 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. நான் மகான் அல்ல ( --- --- --- அந்தி மாலை தோறும் லீலை)
2. பாவை விளக்கு (--- --- --- என் எதிரில் வந்தாள்)
3. விஜயா (--- --- --- --- அந்த மங்கை ரதியாளின் தங்கை)
4. மேட்டுகுடி (--- --- --- இனி வீசும் என்னை பார்த்து)
5. பட்டணத்தில் பூதம் (--- --- --- ஓர் உருவமில்லாதது எது)
6. கற்பகம் (--- --- --- ஆனால் இதுதான் முதலிரவு)
5. பட்டணத்தில் பூதம் (--- --- --- ஓர் உருவமில்லாதது எது)
6. கற்பகம் (--- --- --- ஆனால் இதுதான் முதலிரவு)
7. கண்ணே ராதா (--- --- --- --- நாள் வராதா கைகள் தோள் தொடாதா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்