சொல் வரிசை - 64 புதிருக்காக, கீழே 8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. குலமகள் ராதை (--- --- --- கண்களின் அழைப்பிலே)
2. யார் நீ (--- --- --- பல்லாயிரம் சொல் வேண்டுமா)
1. குலமகள் ராதை (--- --- --- கண்களின் அழைப்பிலே)
2. யார் நீ (--- --- --- பல்லாயிரம் சொல் வேண்டுமா)
3. என் அண்ணன் (--- --- --- --- நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்)
4. வீரபாண்டிய கட்டபொம்மன் (--- --- --- --- என்னை கண்டு மௌன மொழி)
5. நீ வேணுண்டா செல்லம் (--- --- --- --- அக்கறைக்கு கொண்டு செல்ல)
6. எங்க வீட்டுப் பெண் (--- --- --- --- சேர்ந்ததல்லவோ மனித ஜாதி)
7. மாடி வீட்டு மாப்பிள்ளை (--- --- --- நீ நினைப்பதை காட்டும் முன்னாடி)
8. நான் பெற்ற செல்வம் (--- --- --- எந்தன் வாழ்வும் மாறுமா)
8. நான் பெற்ற செல்வம் (--- --- --- எந்தன் வாழ்வும் மாறுமா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை - 63 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. காத்திருந்த கண்கள் (வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்)
2. செல்வ மகள் (வெண்ணிலா முகம் குங்குமம் தரும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்)
2. செல்வ மகள் (வெண்ணிலா முகம் குங்குமம் தரும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்)
3. ஆயிரத்தில் ஒருவன் (உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்)
4. தைப்பொங்கல் (தானே சதிராடும் மாலை வெயில் வேளை)
5. அல்லி (வானம் நிலவை மறந்தது மறந்தது அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது)
6. உன்னை கண் தேடுதே (தேடுதே உன்னை கண் தேடுதே உயிரின் பாதியே உனை கண் தேடுதே)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: மெல்லத் திறந்தது கனவு
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
1. குலமகள் ராதை (கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே)
ReplyDelete2. யார் நீ (பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா)
3. என் அண்ணன் (கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்)
4. வீரபாண்டிய கட்டபொம்மன் (இன்பம் பொங்gஉம் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன மொழி)
5. நீ வேணுண்டா செல்லம் (கள்ளத் தோணி கள்ளத் தோணி (அடுத்த சொல் புரியவில்லை!) அக்கறைக்கு கொண்டு செல்ல)
6. எங்க வீட்டுப் பெண் (சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி)
7. மாடி வீட்டு மாப்பிள்ளை (நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதை காட்டும் முன்னாடி)
8. நான் பெற்ற செல்வம் (இன்பம் வன்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா)
இறுதி விடைகள்:
பாடல் வரி:
கள்ள பார்வை கண்ணுக்கு இன்பம் கள்ள சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
படம்: எங்களுக்கும் காலம் வரும்
1. குலமகள் ராதை (கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே)
ReplyDelete2. யார் நீ (பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா)
3. என் அண்ணன் (கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்)
4. வீரபாண்டிய கட்டபொம்மன் (இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன மொழி)
5. நீ வேணுண்டா செல்லம் (கள்ளத் தோனி கள்ளத் தோனிக்காரா அக்கறைக்கு கொண்டு செல்ல)
6. எங்க வீட்டுப் பெண் (சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி)
7. மாடி வீட்டு மாப்பிள்ளை (நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதை காட்டும் முன்னாடி)
8. நான் பெற்ற செல்வம் (இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா)
இறுதி விடை :
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
- எங்களுக்கும் காலம் வரும்