Tuesday, April 15, 2014

சொல் வரிசை - 63


சொல் வரிசை - 63 புதிருக்காக, கீழே   6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   காத்திருந்த கண்கள்  (--- --- --- நீ போ என்றது நாணம்)
2.   செல்வ மகள்  (--- --- --- --- நல்ல நாள் தரும் மங்கலம் வரும்) 
3.   ஆயிரத்தில் ஒருவன்  (--- --- --- நீ ஆயிரத்தில் ஒருவன்)
4.   தைப்பொங்கல்  (--- --- மாலை வெயில் வேளை)
5.   அல்லி  (--- --- --- --- அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது)
6.   உன்னை கண் தேடுதே (--- --- --- --- உயிரின் பாதியே உனை கண் தேடுதே)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 62 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   ஆயிரத்தில் ஒருவன் (அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்)
2.   வெற்றிக்கரங்கள் (மேக வீதியில் நூறு வெண்ணிலா மேடை போட்டு ஆடுகின்றதே) 
3.   கௌரி (ஊர்வலம் போகும் மேகங்கள் போலே போகுது என் மனம் எங்கோ)
4.   ஏழை ஜாதி  (அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம்)
5.   வி.ஐ.பி. (மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே)
6.   வெற்றிக்கு ஒருவன் (தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி)
7.   ஊட்டி வரை உறவு (அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக) 
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
அதோ மேக ஊர்வலம்     
அதோ மின்னல் தோரணம் அங்கே                               
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:    ஈரமான ரோஜாவே     
         
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.    முத்து சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்

2 comments:

  1. 1. காத்திருந்த கண்கள் (வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்)
    2. செல்வ மகள் (வெண்ணிலா முகம் குங்குமம் தரும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்)
    3. ஆயிரத்தில் ஒருவன் (உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்)
    4. தைப்பொங்கல் (தானே சதிராடும் மாலை வெயில் வேளை)
    5. அல்லி (வானம் நிலவைமறந்தது மறந்தது அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது)
    6. உன்னை கண் தேடுதே (தேடுதே உனை கண் தேடுதே உயிரின் பாதியே உனை கண் தேடுதே)

    பாடல்: வா வண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே

    படம்: மெல்ல திறந்தது கதவு

    ReplyDelete
  2. 1. காத்திருந்த கண்கள் (வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்)
    2. செல்வ மகள் (வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்)
    3. ஆயிரத்தில் ஒருவன் (உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்)
    4. தைப்பொங்கல் (தானே சதிராடும் மாலை வெயில் வேளை)
    5. அல்லி (வானம் நிலவை மறந்தது மறந்தது அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது)
    6. உன்னை கண் தேடுதே ( தேடுதே உன்னிக் கண் தேடுதே உயிரின் பாதியே உனை கண் தேடுதே)

    இறுதி விடை :
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்திலிருந்து

    - மாதவ் மூர்த்தி

    ReplyDelete