எழுத்துப் படிகள் - 16 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . முருகன் அருள் (4,3)
2 . அமாவாசைக்குப்பின் பௌர்ணமிக்கு முன் நிலவின் நிலை (5)
3 . காமராஜர்? சாவியின் புத்தகம்? (6,4)
3 . காமராஜர்? சாவியின் புத்தகம்? (6,4)
4 . மயிரிழந்தால் உயிர் விடும் விலங்கினம் (5)
5 . மிகச்சிறந்த குமாரன் (4,5)
6 . எழுத்து வரிசை - 3 புதிரின் விடை (3,3)
6 . எழுத்து வரிசை - 3 புதிரின் விடை (3,3)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) ; உலக நாயகனும் நடித்திருக்கிறார்.
சிவாஜி கணேசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் (தமிழில்) கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 15 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . உடன்படிக்கை (6) - ஒப்பந்தம்
2 . செல்வமா பிரியமா (3,3) - பணமா பாசமா
3 . திருமண அன்பளிப்பு (4,3) - கல்யாண பரிசு
3 . திருமண அன்பளிப்பு (4,3) - கல்யாண பரிசு
4 . இனிய ஒலியெழுப்பும் காலணி (4,4) - கொஞ்சும் சலங்கை
5 . குறி கூறுபவளின் குமாரன் (4,3) - குறத்தி மகன்
6 . வாழ்வு தந்த கடவுள் (2,3,4) - வாழ வைத்த தெய்வம்
6 . வாழ்வு தந்த கடவுள் (2,3,4) - வாழ வைத்த தெய்வம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :முத்து, Madhav, வைத்தியநாதன், பாலகணேஷ்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி. .
பாலகணேஷ்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.