எழுத்துப் படிகள் - 14 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை
1 . அரசனின் விழித் தோற்றம்
2 . அன்னையின்றி தான் கிடையாது
3 . அழகான முருகன்
3 . அழகான முருகன்
4 . எல்லா கலைகளிலும் திறமையுள்ளவன்
5 . அரசாங்க விதி
6 . முக்கிய ஆண் பாத்திரம்
6 . முக்கிய ஆண் பாத்திரம்
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
விடைக்கான திரைப்படமும் கமலஹாசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 13 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . குருதிப்பொட்டு - ரத்தத்திலகம்
2 . கலைமகளின் சூளுரை - சரஸ்வதி சபதம்
3 . சாதி இனமா? பண்பா? - குலமா குணமா
3 . சாதி இனமா? பண்பா? - குலமா குணமா
4 . ஐஸ்வர்யம் - செல்வம்
5 . வ.உ.சி - கப்பலோட்டிய தமிழன்
6 . சற்குணன் - உத்தமன்
6 . சற்குணன் - உத்தமன்
7 . ஆண்டவனின் அவதாரம் - தெய்வப்பிறவி
8 . வெற்றிச்சின்னமான பொன் வில்லை - தங்கப்பதக்கம்
9 . பச்சை நிறக்கல் - மரகதம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : முத்து, Madhav
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
வணக்கம் பாலகணேஷ்,
ReplyDeleteஉங்கள் புது வரவுக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.
குறிப்புகளுக்கான விடைகள் அனைத்தும் சரி.
இறுதி விடைக்கான குறிப்பு:
தமிழ்வாணனின் நாவல்களில் இடம் பெற்ற முக்கிய கதாபாத்திரத்தின் பெயர்:
இறுதி விடையை கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
பாலகணேஷ்,
ReplyDeleteஉங்கள் சரியான விடைக்கு பாராட்டுக்கள். நன்றி.
உங்களது கீழ்கண்ட கருத்துக்கும் மிக்க நன்றி.
"ஆஹா... பள்ளி படிக்கும் காலத்தில் நான் ரசித்துப் பார்த்த படமாயிற்றே. அப்போது ஸ்ரீதேவி வெகு அழகாக இருப்பார். அதனால் கொஞ்சம் ஜொள்ளும் ப்ளஸ்தான். சுவாரஸ்யமாய் சிந்தனைக்கு வேலைதரும் உங்கள் தளத்தின் ஸ்டைல் எனக்குப் பிடிச்சிருக்கு ராமராவ் ஸார். மிக்க நன்றி."
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியானவை. நன்றி. பாராட்டுக்கள்.
ராமச்சந்திரன் வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.
வணக்கம் Suji,
ReplyDeleteஉங்கள் புது வரவுக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.
உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள்