Sunday, January 20, 2013

எழுத்துப் படிகள் - 15



எழுத்துப் படிகள் - 15 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:


அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை
1 . உடன்படிக்கை (6)
2 . செல்வமா பிரியமா (3,3)
3 . திருமண அன்பளிப்பு (4,3)
4 . இனிய ஒலியெழுப்பும் காலணி (4,4)
5 . குறி கூறுபவளின் குமாரன் (4,3)
6 . வாழ்வு தந்த கடவுள் (2,3,4)
 
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) ; பொருள்: பண்பழகி
கதாநாயகி: சாவித்திரி;
 
விடைக்கான திரைப்படமும் ஜெமினிகணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 14 க்கான குறிப்புகளின் விடைகள்:

1 . அரசனின் விழித் தோற்றம்                                             - ராஜ பார்வை
2 . அன்னையின்றி தான் கிடையாது                                - தாயில்லாமல் நானில்லை
3 . அழகான முருகன்                                                                 - சிங்கார வேலன்
4 . எல்லா கலைகளிலும் திறமையுள்ளவன்               - சகலகலா வல்லவன்
5 . அரசாங்க விதி                                                                        - சட்டம்
6 . முக்கிய ஆண் பாத்திரம்                                                   - நாயகன்

இறுதி விடை: சங்கர்லால்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : முத்து, Madhav, வைத்தியநாதன், பாலகணேஷ்


இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

4 comments:

  1. முத்து,

    உங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  2. வைத்தியநாதன்,

    உங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  3. பாலகணேஷ்,

    உங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  4. Madhav,

    உங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete