எழுத்து வரிசை புதிர் - 13 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 வாடகை கார் ஓட்டுனர் ஜெய்சங்கர் (3,4)
2 "வாழ்க பாரதம்" அர்ஜுன் (5)
3 மலையாள காவலர் சத்யராஜ் (4,3)
4 விஜய் வசிக்கும் இனிமையான ஊர்? (பேச்சு வழக்கில்) (3)
5 சி.சுந்தர், விவேக் இடையே கைகலப்பு? (பேச்சு வழக்கில்) (3)
6 விஜயகாந்தின் தாய் மண் (3,2)
7 மெய்யிழந்த சிறு குழந்தை? துறவி ரஜினி? (2)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை:
ரஜினிகாந்த் நடித்த திரைப்படம். (4,3). முதற்சொல் ஒரு ஆங்கிலச்சொல்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 12 க்கான விடைகள்:
1 திருடனுக்கு பிரியமானவள் நயன்தாரா? - கள்வனின் காதலி
2 அர்ஜுனனின் குமாரன் பார்த்திபன்? - அபிமன்யு
3 ஜெய்சங்கர் செய்த குற்றத்தைப் பொறுத்தல் - மன்னிப்பு
4 முரளியின் தங்கமான பருவம் - பொற்காலம்
5 பல திருடர்களுடன் சண்டையிட்ட கிருஷ்ணா - அலிபாபா
எழுத்து வரிசை புதிர் விடை- பாயும் புலி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, Suji, முத்து
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Suji,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி