எழுத்து வரிசை புதிர் - 11 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 சத்யராஜின் திறவுகோல்?
2 இளவரசியின் சேவல் கூவும் ஓசை?
3 ஜெமினி கிருஷ்ணா சௌக்கியமா
4 ராஜாதி ராஜா எம்.ஜி.ஆர்.
5 சத்யராஜின் ராணுவம்
6 முத்துராமனின் புனர்ஜென்மம்
7 விஜய்யும் சூர்யாவும் நண்பர்கள்
8 பெருமாளே ரஜினி
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை: ரஷியாவும் இந்தியாவும் இணைந்தது.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 10 க்கான விடைகள்:
1 இந்திய அழகன் ரஜினி? - மிஸ்டர் பாரத்
2 நரேனின் உள்ளம் இருக்கும் மட்டும் - நெஞ்சிருக்கும்வரை
3 பிரியமான தந்தை சிவாஜி - அன்புள்ள அப்பா
4 கமல் ரஜினி வாலிபம் தள்ளாடுகிறது - இளமை ஊஞ்சலாடுகிறது
5 ஓடம் செலுத்தும் எம்ஜி.ஆர். - படகோட்டி
6 சிவாஜியின் செந்நிற பூமி? - சிவந்த மண்
எழுத்து வரிசை புதிர் விடை - பாண்டித்துரை
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai, 10அம்மா
இவர்கள் மூவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. பாராட்டுக்கள்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. பாராட்டுக்கள்.
MeenuJai,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. பாராட்டுக்கள்.