Wednesday, January 2, 2013

சொல் வரிசை - 14



கீழே எட்டு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . பிரியமானவளே
2 . பாலும் பழமும்
3 . பகவதி

4 . ரிதம்
5 . 7G ரெயின்போ காலனி
6 . பார்த்தால் பசி தீரும்
7 . தீபாவளி
8 . பிரியமான தோழி 
 
   
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில் இரண்டு ஆங்கில மாதங்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 13 க்கான விடைகள்:
திரைப்படம்                                           பாடலின் தொடக்கம்                                  தொடக்கச் சொல்
  
1 . ஜெயம் கொண்டான்                               உல்லாச உலகம் உனக்கே சொந்தம்           உல்லாச
2 . பையா                                                      பூங்காற்றே பூங்காற்றே                               பூங்காற்றே
3 . போலீஸ்காரன் மகள்                              இந்த மன்றத்தில் ஓடி வரும்                       இந்த

4 . தேன் நிலவு                                              ஊரெங்கும் தேடினேன்                                ஊரெங்கும்
5 . அம்மன் கோயில் கிழக்காலே                 உன் பார்வையில் ஓராயிரம்                        உன்
6 . பாத காணிக்கை                                       வீடு வரை உறவு                                                 வீடு
 
மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்


உல்லாச பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: கோலங்கள்


எல்லா விடைகளையும் அனுப்பியவர் ஒருவர் மட்டுமே : Madhav

இவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
ராமராவ்

2 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. MeenuJai,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete