எழுத்து வரிசை புதிர் - 12 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 திருடனுக்கு பிரியமானவள் நயன்தாரா?
2 அர்ஜுனனின் குமாரன் பார்த்திபன்?
3 ஜெய்சங்கர் செய்த குற்றத்தைப் பொறுத்தல்
4 முரளியின் தங்கமான பருவம்
5 பல திருடர்களுடன் சண்டையிட்ட கிருஷ்ணா
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை: ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 11 க்கான விடைகள்:
1 சத்யராஜின் திறவுகோல்? - சாவி
2 இளவரசியின் சேவல் கூவும் ஓசை? - கொக்கரக்கோ
3 ஜெமினி கிருஷ்ணா சௌக்கியமா - கண்ணா நலமா
4 ராஜாதி ராஜா எம்.ஜி.ஆர். - மன்னாதி மன்னன்
5 சத்யராஜின் ராணுவம் - மிலிட்டரி
6 முத்துராமனின் புனர்ஜென்மம் - மறுபிறவி
7 விஜய்யும் சூர்யாவும் நண்பர்கள் - பிரண்ட்ஸ்
8 பெருமாளே ரஜினி - ரங்கா
எழுத்து வரிசை புதிர் விடை - மாஸ்கோவின் காவிரி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai, 10அம்மா, நாகராஜன்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள்.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரியே. பாராட்டுக்கள். நன்றி.
Suji,
ReplyDeleteமுதன் முதலாக பங்கு கொண்டதற்கு நன்றி.
உங்கள் விடைகள் எல்லாமே சரியே. பாராட்டுக்கள்.
முத்து,
ReplyDeleteசரியான விடைகளை கண்டுபிடித்தமைக்கு பாராட்டுக்கள். நன்றி.