எழுத்து வரிசை புதிர் - 7 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 கார்த்தி சிறுவனே
2 மோகன் இசை மதியே
3 அருண் விஜய் இடையூறின்றி மோத
4 ஜீவா! இனிப்பாக உள்ளதே
5 தேவயானி! உன் வரவுக்காக
6 லவ் பண்ண முடியாமல் பிஸி
7 சூர்யா! காப்பாற்று! காப்பாற்று!
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.comமின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 6 க்கான விடைகள்:
1 சுக்ரீவனின் எதிரி அஜீத் - வாலி
2 ஷோபாவின் உணவு வேட்கை - பசி
3 கமல் எடுத்த பத்து பிறவி - தசாவதாரம்
4 விக்ரம் ஆங்கிலேய மன்னன் - கிங்
5 சாவித்திரியின் வடிவத்திற்கு செய்யும் சீமந்தம் - வடிவுக்கு வளைகாப்பு
6 சிவாஜி வாழ்வது கூடப்பிறந்தவளுக்காக - தங்கைக்காக
எழுத்து வரிசை புதிர் விடை - சிங்கம் புலி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, 10அம்மா, முகிலன்
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்
Madhav, MeenuJai,
ReplyDeleteஉங்கள் இருவரது விடைகளும் சரி. நன்றி. வாழ்த்துகள்.