Friday, November 9, 2012

எழுத்து வரிசை - 6

 

எழுத்து வரிசை புதிர் - 6 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:    

 

1 சுக்ரீவனின் எதிரி அஜீத்
2 ஷோபாவின் உணவு வேட்கை
3 கமல் எடுத்த பத்து பிறவி
4 விக்ரம் ஆங்கிலேய மன்னன்
5 சாவித்திரியின் வடிவத்திற்கு செய்யும் சீமந்தம்
6 சிவாஜி வாழ்வது கூடப்பிறந்தவளுக்காக

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.comமின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 5 க்கான விடைகள்:
 
1 கிராமத்தில் மரியாதையாக அழைக்கப்படும் சரத்குமார் - ஐயா
2 கமலின் ஆசான் - குரு
3 வினயின் அச்சுறுத்தல் - மிரட்டல்
4 சிவாஜி ஆண்டவனின் அவதாரம் - தெய்வப் பிறவி
5 விஷ்ணுப்பிரியன் மதுமிதாமேல்  பிரியம் உண்மையாக - காதல் மெய்பட
6 மோனிகா ஒரு எட்டுக்கால் பூச்சி - சிலந்தி
7 ரஜினிக்கு தனுஷ் - மாப்பிள்ளை
 
எழுத்து வரிசை புதிர் விடை - திருவிளையாடல் 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, 10அம்மா, யோசிப்பவர்

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

 
ராமராவ்

5 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    4 வது குறிப்பு "விக்ரம் மன்னன்" என்றிருக்க வேண்டும். தவறுதலாக "சரத்குமார் மன்னன்" என்று கொடுத்து விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். தவறினை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. முகிலன்,

    நீங்கள் கூறியிருப்பது சரி. தவறுக்கு வருந்துகிறேன். Madhav அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.

    ReplyDelete
  3. MeenuJai,

    4வது குறிப்பு விக்ரம் ஆங்கிலேய மன்னன் என்றிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

    5 வதும், 6 வதும் தவறு. 5 வது பழைய படம். AP நாகராஜன் இயக்கிய படம்.

    ReplyDelete
  4. முகிலன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்

    ReplyDelete