Tuesday, November 20, 2012

சொல் வரிசை - 11

கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . அம்மன் அருள்
2 . பணக்கார குடும்பம்
3 . பாசம்

4 . மக்களைப் பெற்ற மகராசி
5 . குலமா குணமா
6 . அவள் ஒரு தொடர்கதை
7 . ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
 
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில், ஒரே சொல் தான் 2-வது, 4-வது, 7-வது சொல்லாக அமைந்துள்ளது.

 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 10 க்கான விடைகள்:
திரைப்படம்                                           பாடலின் தொடக்கம்                                      தொடக்கச் சொல்

1 . அன்புக்கோர் அண்ணன்              தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்           தென்மதுரை
2 . உயிருள்ளவரை உஷா                 வைகைக்கரை காற்றே நில்லு                                 வைகை
3 . இருவர் உள்ளம்                            நதி எங்கே போகிறது கடலை தேடி                          நதி

4 . வரலாறு                                        தினம் தினம் தினம் தீபாவளி                                    தினம்

5 . நான் பாடும் பாடல்                       பாடும் வானம்பாடி                                                    பாடும்
6 . கூடல் நகர்                                    தமிழ் செல்வி தமிழ் செல்வி                                    தமிழ்
7 . புது வசந்தம்                                  பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா                             பாட்டு
 
 
மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்


தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: தர்மத்தின் தலைவன்



எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav , முகிலன்

இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
 
 
 
ராமராவ்


2 comments:

  1. முகிலன்,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete