Wednesday, November 14, 2012

எழுத்துப் படிகள் - 9

 
எழுத்துப் படிகள் - 9 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . திருமகளுக்கு திருமணம்
2 . தீர்மானம்
3 . காலனுக்கு காலன்
4 . கரம் தந்த இறைவன்
5 . பங்கு பகிர்ந்தளிப்பு
6 . காக்கும் கடவுள்
7 . அடிவானம் செந்நிறமாகும்
8   துலாபாரம்

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின்     3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது படத்தின் 8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 8 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 கலாட்டா கல்யாணம்
2 வியட்நாம் வீடு
3 இல்லற ஜோதி
4 எழுதாத சட்டங்கள்
5 தெனாலி ராமன்
6 ஜஸ்டிஸ் கோபிநாத்
7 பட்டிக்காடா பட்டணமா
இறுதி விடை: ஜல்லிக்கட்டு

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, 10அம்மா, யோசிப்பவர்
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

5 comments:

  1. முத்து,

    உங்களது அனைத்து விடைகளும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சாந்தி நாராயணன்,

    உங்களது அனைத்து விடைகளும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Madhav,

    குறிப்புகளுக்கான எல்லா விடைகளும் சரி. இறுதி விடையை கண்டு பிடித்து அனுப்புங்கள்.

    ReplyDelete
  4. Madhav,

    உங்களது இறுதி விடை சரி. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. யோசிப்பவர்,

    உங்களது அனைத்து விடைகளும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete