Monday, November 5, 2012

சொல் வரிசை - 9

 

கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . காதலிக்க வாங்க
2 . முகராசி
3 . இதய வீணை 

4 . வேட்டை
5 . போக்கிரி ராஜா
6 . கடவுளைக் கண்டேன்
7 . பிராப்தம்
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
 


குறிப்புகள் :
 
சொல் வரிசை விடைக்கான பாடல்: ஆன்மீக ரஜினி படத்தில் இடம் பெற்றது.
4 வது சொல் 3 வது சொல்லின் கடைசி 2 எழுத்துக்கள்.
5 வது சொல்லும் 6 வது சொல்லும் ஒன்றே.

 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 8 க்கான விடைகள்:
திரைப்படம்                        பாடலின் தொடக்கம்                                                  தொடக்கச் சொல்

1 . முதல்வன்                     அழகான ராட்சசியே                                                             அழகான
2 . மம்பட்டியான்                சின்ன பொண்ணு சேலை                                                   சின்ன
3 . கோபுரவாசலிலே          தேவதை போலொரு                                                          தேவதை
4 . அங்காடித்தெரு              அவள் அப்படி ஒன்றும்                                                      அவள்


5 . பேரும் புகழும்               தானே தனக்குள் ரசிக்கின்றாள்                                        தானே
6 . வானத்தைப்போல        எங்கள் வீட்டில் எல்லா நாளும்                                       எங்கள்
7.  இரு கோடுகள்               புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்                              புன்னகை 

மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புன்னகை

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: சமுத்திரம்  


எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav , முகிலன், MeenuJai , 10அம்மா
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
 
ராமராவ்


 

 

4 comments:

  1. ஒரு சிறு தவறு. கொடுக்கப்பட்ட திரைப்படங்களில் 3 வதாக இதய வீணை என்றிருக்க வேண்டும். தவறுதலாக இதயக்கனி என்று அச்சுப்பிழை நேர்ந்துவிட்டது. தவறைத் திருத்திவிட்டேன். தவறுதலுக்காக வருந்துகிறேன்.

    தவறை சுட்டிக்காட்டிய Madhav அவர்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. Madhav ,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. வாழ்த்துகள்.

    தவறினைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.
    நன்றி. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. முகிலன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete