சொல் வரிசை - 269 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
* * * * * * * *
1. ஆயிரங்காலத்துப்பயிரு(--- --- --- --- --- நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா)
2. மகாகவி காளிதாஸ்(--- --- --- --- புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்)
3. இதயத்தில் நீ(--- --- --- பிரிவு என்றொரு பொருளிருக்கும்)
4. பார்த்தால் பசிதீரும்(--- --- --- அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ)
4. பார்த்தால் பசிதீரும்(--- --- --- அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ)
5. இளைய தலைமுறை(--- --- --- --- --- நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்)
6. பாமா விஜயம் (--- --- --- --- அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்