Saturday, January 30, 2016

சொல் வரிசை 106

சொல் வரிசை - 106  புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     புதுமைப்பித்தன் (---  ---  ---  ---  ---  எனதன்பே என்னைப் பார்) 
2.     புதிய வாழ்க்கை (---  ---  ---  ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்)  
3.     பஞ்ச தந்திரம் (---  ---  மீண்டும் நானே வந்தேன்) 
4.     சங்கே முழங்கு (---  ---  ---  ---  ---  உன்னைத் தழுவிக் கண்டேன்) 
5.     தாமிரபரணி (---  ---  ---  ---  கொல்லப் பாக்குதே) 
6.     நங்கூரம் (---  ---  நீ இல்லாமல் நான் இல்லையே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/

ராமராவ்  

3 comments:


  1. 1. புதுமைப்பித்தன் - அழகைப் பார் நீ பழகிப் பார்
    2. புதிய வாழ்க்கை - பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
    3. பஞ்ச தந்திரம் - வந்தேன் வந்தேன்
    4. சங்கே முழங்கு - தமிழில் அது ஒரு இனிய கலை
    5. தாமிரபரணி - வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு
    6. நங்கூரம் - இல்லை இல்லை

    இறுதி விடை :
    அழகைப் பாட வந்தேன்
    தமிழில் வார்த்தை இல்லை
    - பொற்சிலை

    ReplyDelete
  2. அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தை இல்லை
    படம் - பொற்சிலை

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 1.2.2016 அன்று அனுப்பிய விடை:

    அழகைப் பார் நீ பழகிப் பார் எனதன்பே என்னைப் பார்
    பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
    வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
    தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன்
    வார்த்தை ஒண்ணு வார்த்தை ஒண்ணு கொல்லப் பாக்குதே
    இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

    அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தை இல்லை
    திரைப்படம் : பொற்சிலை.

    ReplyDelete