Thursday, November 29, 2012

எழுத்து வரிசை - 8

 

 

எழுத்து வரிசை புதிர் - 8 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 விஜயகாந்த் மனம் விண்ணைப் போன்றது?
2 சேனைத்தலைவன் ரஜினி
3 அஜீத்தின் ஜீவனோடு ஜீவனாக
4 டி.ராஜேந்தரின் வாய்மொழியால் தான் பிரியமா?
5 பாக்கியராஜின் மூன்று செல்லங்கள்
6 விஷாலின் வேட்டு
7 சிவாஜியின் தெய்வலீலை 
 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 7 க்கான விடைகள்:
 
 

1 கார்த்தி சிறுவனே - பையா
2 மோகன் இசை மதியே - பாடு நிலாவே
3 அருண் விஜய் இடையூறின்றி மோத - தடையறத்தாக்க
4 ஜீவா! இனிப்பாக உள்ளதே - தித்திக்குதே
5 தேவயானி! உன் வரவுக்காக - நீ வருவாய் என
6 லவ் பண்ண முடியாமல் பிஸி - காதலிக்க நேரமில்லை
7 சூர்யா! காப்பாற்று! காப்பாற்று! - காக்க காக்க 

எழுத்து வரிசை புதிர் விடை - கனவே கலையாதே

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai

இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

ராமராவ்


 
 

Tuesday, November 27, 2012

எழுத்துப் படிகள் - 10

 
எழுத்துப் படிகள் - 10 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை
1 . தீர்ப்பளிப்பவர்
2 . வறியவரின் கூட்டாளி
3 . பந்தத்துக்கு கரம் தருவோம்
4 . கமல் முதலில் திரையில் அவதரித்தது இவரிடம்?
5 . உறை நீர் அலை
6 . சிசு மனம்
7 . கணவனே பெண்ணின் செல்வம்


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.


 
விடைக்கான திரைப்படமும் ஜெமினி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 9 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 லட்சுமி கல்யாணம்
2 தீர்ப்பு
3 எமனுக்கு எமன்
4 கை கொடுத்த தெய்வம்
5 பாகப்பிரிவினை
6 காவல் தெய்வம்
7 கீழ்வானம் சிவக்கும்
8 தராசு
இறுதி விடை:   தவப்புதல்வன்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, சாந்தி நாராயணன், யோசிப்பவர்
 


இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்

Tuesday, November 20, 2012

சொல் வரிசை - 11

கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 . அம்மன் அருள்
2 . பணக்கார குடும்பம்
3 . பாசம்

4 . மக்களைப் பெற்ற மகராசி
5 . குலமா குணமா
6 . அவள் ஒரு தொடர்கதை
7 . ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
 
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில், ஒரே சொல் தான் 2-வது, 4-வது, 7-வது சொல்லாக அமைந்துள்ளது.

 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 10 க்கான விடைகள்:
திரைப்படம்                                           பாடலின் தொடக்கம்                                      தொடக்கச் சொல்

1 . அன்புக்கோர் அண்ணன்              தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்           தென்மதுரை
2 . உயிருள்ளவரை உஷா                 வைகைக்கரை காற்றே நில்லு                                 வைகை
3 . இருவர் உள்ளம்                            நதி எங்கே போகிறது கடலை தேடி                          நதி

4 . வரலாறு                                        தினம் தினம் தினம் தீபாவளி                                    தினம்

5 . நான் பாடும் பாடல்                       பாடும் வானம்பாடி                                                    பாடும்
6 . கூடல் நகர்                                    தமிழ் செல்வி தமிழ் செல்வி                                    தமிழ்
7 . புது வசந்தம்                                  பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா                             பாட்டு
 
 
மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்


தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: தர்மத்தின் தலைவன்



எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav , முகிலன்

இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
 
 
 
ராமராவ்


Friday, November 16, 2012

எழுத்து வரிசை - 7

எழுத்து வரிசை புதிர் - 7 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 கார்த்தி சிறுவனே
2 மோகன் இசை மதியே
3 அருண் விஜய் இடையூறின்றி மோத
4 ஜீவா! இனிப்பாக உள்ளதே
5 தேவயானி! உன் வரவுக்காக
6 லவ் பண்ண முடியாமல் பிஸி
7 சூர்யா! காப்பாற்று! காப்பாற்று! 
 
 
  
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.comமின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 6 க்கான விடைகள்:
 
1 சுக்ரீவனின் எதிரி அஜீத் - வாலி
2 ஷோபாவின் உணவு வேட்கை - பசி
3 கமல் எடுத்த பத்து பிறவி - தசாவதாரம்
4 விக்ரம் ஆங்கிலேய மன்னன் - கிங்
5 சாவித்திரியின் வடிவத்திற்கு செய்யும் சீமந்தம் - வடிவுக்கு வளைகாப்பு
6 சிவாஜி வாழ்வது கூடப்பிறந்தவளுக்காக - தங்கைக்காக
 
 
 
எழுத்து வரிசை புதிர் விடை - சிங்கம் புலி
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, 10அம்மா, முகிலன்
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.

ராமராவ்

Wednesday, November 14, 2012

எழுத்துப் படிகள் - 9

 
எழுத்துப் படிகள் - 9 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . திருமகளுக்கு திருமணம்
2 . தீர்மானம்
3 . காலனுக்கு காலன்
4 . கரம் தந்த இறைவன்
5 . பங்கு பகிர்ந்தளிப்பு
6 . காக்கும் கடவுள்
7 . அடிவானம் செந்நிறமாகும்
8   துலாபாரம்

திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின்     3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது படத்தின் 8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 8 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 கலாட்டா கல்யாணம்
2 வியட்நாம் வீடு
3 இல்லற ஜோதி
4 எழுதாத சட்டங்கள்
5 தெனாலி ராமன்
6 ஜஸ்டிஸ் கோபிநாத்
7 பட்டிக்காடா பட்டணமா
இறுதி விடை: ஜல்லிக்கட்டு

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, முத்து, 10அம்மா, யோசிப்பவர்
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்