Tuesday, December 27, 2016

சொல் அந்தாதி - 64



சொல் அந்தாதி - 64   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  தாயே உனக்காக - அமைதி புறாவே       
  
2.  அலிபாபாவும் 40 திருடர்களும்                 

3.  மேஜர் சந்திரகாந்த்                        

4.  அஞ்சலி                        

5.  முகூர்த்த நாள்                         


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

1 comment:

  1. 1. தாயே உனக்காக - அமைதி புறாவே

    2. அலிபாபாவும் 40 திருடர்களும் - உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே

    3. மேஜர் சந்திரகாந்த் - நானே பனி நிலவு வருவேன் பல இரவு

    4. அஞ்சலி - இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது

    5. முகூர்த்த நாள் - நடந்தது நேற்று முடிந்தது

    - Madhav

    ReplyDelete