Saturday, December 24, 2016

சொல் வரிசை - 152


சொல் வரிசை - 152  புதிருக்காக, கீழே   ஆறு  (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட  பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    கிளிப்பேச்சு கேட்கவா (---  ---  ---  நின்றது யாரடி கிளியே)
  
2.    மூன்று முடிச்சு (---  ---  ---  வைரமணி நீரலைகள்) 

3.    குமாஸ்தாவின் மகள் (---  ---  --- அது கண்ணாமூச்சி விளையாட்டு) 

4.    சாந்தி நிலையம் (---  ---  ---  பறப்பதும் அவரவர் எண்ணங்களே) 

5.    அன்பே வா (---  ---  ---  ---  எங்கும் பனிமழை பொழிகிறது

6.    கல்யாண பறவைகள் (---  ---  வாசல் எங்கே) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. கிளிப்பேச்சு கேட்கவா - வந்தது வந்தது நெஞ்சினில்

    2. மூன்று முடிச்சு - வசந்த கால நதிகளிலே

    3. குமாஸ்தாவின் மகள் - காலம் செய்யும் விளையாட்டு

    4. சாந்தி நிலையம் - பூமியில் இருப்பதும்

    5. அன்பே வா - புதிய பூமி புதிய வானம்

    6. கல்யாண பறவைகள் - கோலம் இங்கே

    இறுதி விடை :
    வந்தது வசந்த காலம்
    பூமியில் புதிய கோலம்
    - புதியவன்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 28.12.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    வந்தது வந்தது நெஞ்சினில்
    வசந்த கால நதிகளிலே
    காலம் செய்யும் விளையாட்டு
    பூமியில் இருப்பதும் வானத்தில்
    புதிய வானம் புதிய பூமி
    கோலம் இங்கே

    வந்தது வசந்த காலம் பூமியில் புதிய கோலம்

    திரைப்படம்: புதியவன்

    ReplyDelete