சொல் வரிசை - 107 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அன்பு ரோஜா (--- --- --- பார்க்கவில்லை யாரும்)
2. வல்லவனுக்கு வல்லவன் (--- --- --- --- முகம் ஒன்று ஆடுது)
3. தாய் சொல்லைத் தட்டாதே (--- --- --- --- நீ உறங்கவில்லை நிலவே)
4. கந்தன் கருணை (--- --- --- --- நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு)
5. தெய்வீக ராகங்கள் (--- --- --- பால் நிலா புன்னகை)
6. புனர் ஜென்மம் (--- --- --- தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்
1. அன்பு ரோஜா - பால் நிலவு நேரம்
ReplyDelete2. வல்லவனுக்கு வல்லவன் - மனம் என்னும் மேடை மேலே
3. தாய் சொல்லைத் தட்டாதே - பூ உறங்குது பொழுதும் உறங்குது
4. கந்தன் கருணை - மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
5. தெய்வீக ராகங்கள் - பாவை நீ மல்லிகை
6. புனர் ஜென்மம் - மனம் ஆடுது பாடுது
இறுதி விடை :
பால் மனம் பூ மனம் பாவை மனம்
- ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
- Madhav
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 6.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபால் மனம் பூ மனம் பாவை மனம்
படம்:ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
திரு ஸ்ரீதரன் துரைவேலு 7.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபால் நிலவு நேரம்
மனம் என்னும் மேடை மேலே
பூ உறங்குது பொழுதும் உறங்குது
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
பாவை நீ மல்லிகை
மனம் ஆடுது பாடுது
பால் மனம் பூ மனம் பாவை மனம்
திரைப் படம்::ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 8.2.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபடம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
பாடல் பால் மனம் பூ மனம் பாவை மனம்.
1 பால் நிலவு நேரம்
2 மனம் ஒன்று
3 பூ உறங்குது
4 மனம் படைத்தேன்.
5 பாவை நீ மல்லிகை
6 மனம் ஆடுது பாடுது