Wednesday, September 2, 2015

சொல் வரிசை - 86

சொல் வரிசை - 86 புதிருக்காக, கீழே பதினொன்று  (11) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     நீங்கள் கேட்டவை ( --- --- --- --- கலைந்து போகும் கோலங்கள்)  
2.     மேயர் மீனாட்சி (--- --- --- --- --- அங்கே உல்லாச ஊர்வல ஓடம்)
3.     படித்தால் மட்டும் போதுமா (--- --- --- நல்ல ரசிகனும் இல்லை)  
4.     ஒரு ஓடை நதியாகிறது (--- --- --- இதை யாரோடு சொல்ல)
5.     மதுர (--- --- --- --- --- கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்)
6.     காதல் காதல் காதல் (--- --- --- ---  நம் இருவர் பார்வை ஊடலா)  
7.     நிமிர்ந்து நில் (--- --- --- ---  காதல் பார்வையில் கண்கள் கூசும்) 
8.     அலை ஓசை (--- --- ---  சினந்தது ஏனோ)
9.     வரவேற்பு (--- --- --- வரவேற்கும் மது ரோஜா )  
10.   கார்மேகம் (--- --- காதல் பூஞ்சோலை) 
11.   காற்றினிலே வரும் கீதம் (--- --- --- --- காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்)      

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

2 comments:


  1. 1. நீங்கள் கேட்டவை- கனவு காணும் வாழ்க்கை யாவும்
    2. மேயர் மீனாட்சி - கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
    3. படித்தால் மட்டும் போதுமா- நன் கவிஞனும் இல்லை
    4. ஒரு ஓடை நதியாகிறது- கனவு ஒன்று தோன்றுதே
    5. மதுர- கண்டேன் கண்டேன் எதிர் காலம் நான் கண்டேன்
    6. காதல் காதல் காதல் - நம் இருவர் பார்வை காதலா
    6. நிமிர்ந்து நில் - காதல் நேர்கையில் மெளனம் பேசும்
    7. அலை ஓசை-கனிந்து வரும் நேரம்
    8. வரவேற்பு - வர வேண்டும் மகராஜா
    9. கார்மேகம் - கனவு தொழிற்சாலை
    10. காற்றினிலே வரும் கீதம் - கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம்

    இறுதி விடை :
    கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
    நம் காதல் கனிந்து வர கனவு கண்டேன்
    - சிவகங்கை சீமை

    ReplyDelete
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 3.9.15 அன்று அனுப்பிய விடைகள்:

    1 கனவு காணும் வாழ்க்கை
    2 கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
    3 நான் கவிஞ்சனும் இல்லை
    4 கனவு ஒன்று தோன்றுதே
    5 கண்டேன் கண்டேன்
    6 வர.......
    7 காதல் நேர்கையில் மௌனம் பேசும்
    8 கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
    9 வரவேண்டும் மகாராஜா
    10 கனவுத் தொழிற்சாலை
    11 கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்

    இணைந்த பாடல்

    கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் காதல் கனிந்து வர கனவு கண்டேன்

    படம்: சிவகங்கை சீமை

    ReplyDelete